சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கிய கேகேஆர் சூப்பர் ஹீரோ ரிங்கு சிங் – விலை எவ்வளவு தெரியுமா?

First Published | Nov 10, 2024, 1:55 PM IST

Rinku Singh New Luxury House : கேகேஆர் அணியில் ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ரிங்கு சிங்கு அலிகாரில் பல கோடிக்கு சொகுசு பங்களாவை வாங்கியிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.

Rinku Singh New House at Aligarh

Rinku Singh New Luxury House : ஐபிஎல் 2025 ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற இருக்கிறது. அப்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் 22 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ரிங்கு சிங் மட்டுமே அதிகபட்சமாக ரூ.13 கோடி கொடுத்து தக்க வைக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக சாம்பியனானது.

Rinku Singh, Indian Cricket Team

ஆனால், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கூட கேகேஆர் தக்க வைக்கவில்லை. அவர் கூடுதலாக சம்பளம் கேட்டதாக விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ரிங்கு சிங்குவைத் தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் ரமண் தீப் சிங் ஆகியோர் ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டனர்.

கடந்த சீசனில் ரூ.24.75 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட மிட்செல் ஸ்டாரக்கையும் கேகேஆர் கழற்றிவிட்டது. ஆனால், அவரை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 6 வீரர்களுக்காக கேகேஆர் ரூ.57 கோடியை செலவு செய்துள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு கேகேஆர் ரூ.63 கோடியை கையில் வைத்துள்ளது.

Tap to resize

IPL 2025, KKR Released and Retained Players

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேகேஆர் விடுவித்த வீரர்களின் பட்டியல்

ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஃபில் சால்ட், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், வைபவ் அரோரா, KS பாரத், சேதன் சகாரியா, மிட்செல் ஸ்டார்க், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, அல்லா கஜன்ஃபர், துஷ்மந்த சமீரா, சகிப் ஹுசைன், ஜேசன் ராய், குஸ் அட்கின்சன், முஜீப் உர் ரஹ்மான்

Rinku singh, Kolkata Knight Riders

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த சீசனில் பல போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ரிங்கு சிங், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஒரு ஆடம்பரமான சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார்.

Rinku Singh New Luxury House

ஓசோன் சிட்டியில் உள்ள கோல்டன் எஸ்டேட்டில் உள்ள ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான வீட்டை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெற்றுள்ளார். முதல் டி20 போட்டியில் 11 ரன்னுக்கு ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது.

Latest Videos

click me!