Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!

Published : Jul 23, 2026, 08:20 PM IST

Vaibhav Sooryavanshi: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.

PREV
14
ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா

ஹராரேவில் நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மதேவெரே அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 4 ஓவரில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட் சாய்த்தார்.

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை

பின்பு ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் சிக்சர் மழை பொழிந்த 15 வயதே ஆன பாலகன் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது அரை சதத்தை விளாசினார். வெறும் 18 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். அவருடைய இந்த அதிரடி ஆட்டத்தில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.

24
சர்வதேச டி20-யில் முதல் அரைசதம் அடித்த இளம் வயது வீரர்

தற்போது வைபவ் வயது 15 வருடம் 118 நாட்கள் தான் ஆகிறது. ஐசிசி-யின் முழு அந்தஸ்து பெற்ற அணிகளைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு இந்த சாதனை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் பெயரில் இருந்தது. 2019-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் அரைசதம் அடித்தபோது, அவருக்கு 17 வருடம் 296 நாட்கள் வயது. இப்போது வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையை தகர்த்துள்ளார்.

சர்வதேச டி20-யில் முதல் அரைசதம் அடித்த இளம் வயது வீரர்கள் லிஸ்ட்:

15 வயது 118 நாட்கள் - வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) vs ஜிம்பாப்வே, ஹராரே, 2026

16 வயது 56 நாட்கள் - லூயிஸ் ப்ரூஸ் (ஜிப்ரால்டர்) vs மால்டா, அல்பர்கேரியா, 2021

16 வயது 76 நாட்கள் - கவின் சத்தா (இந்தோனேசியா) vs ஸ்வீடன், பாலி, 2026

16 வயது 89 நாட்கள் - அலுசின் துரே (சியரா லியோன்) vs கானா, பெனோனி, 2023

16 வயது 118 நாட்கள் - டென்சின் ரப்கே (பூட்டான்) vs சீனா, கோலாலம்பூர், 2023

34
கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியான 6 போட்டிகளில் அடைந்த தோல்விக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுவும் ஷ்ரேயாஸ் கேப்டன் ஆன பிறகு தான் இந்த 6 தொடர் தோல்விகளும் வந்தது. இன்றைய வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளார்.

44
மயங்க் யாதவ் சாதனை

முன்னதாக இந்த போட்டியின் முதல் பந்திலேயே தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பாஸ்ட் பவுலர் மயங்க் யாதவ், சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள் என்ற சிறப்புமிக்க சாதனை பட்டியலில் இணைந்தார். இரண்டு ஆன்டுகளுக்கு பிறகு தனது கம்பேக் போட்டியில் மாஸ் காட்டியுள்ள மயங்க் யாதவ் ஆட்டநாயன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories