Usman Khawaja
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று பெர்த்தில் தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா பயிற்சியின் போது தனது ஷூவில் அனைத்து உயிர்களும் சமம் என்ற வாசகத்தை எழுதியிருந்தார்.
Usman Khawaja
இது பாலஸ்தீன கொடி நிறத்தில் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து இந்த ஷூவை பயன்படுத்தக் கூடாது என்று ஐசிசி வலியுறுத்தியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய பாலஸ்தீன போர் தாக்குதலில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகத்தில் பல தரப்பிலிருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
Usman Khawaja
உடனடியாக இந்த போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஐசிசி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உஸ்மான் கவாஜா இது ஒன்றும் அரசியல் கிடையாது.
Australia vs Pakistan Perth Test
மனிதநேயத்தை மட்டுமே தான் வெளிப்படுத்தியதாக கூறியிருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை.
Usman Khawaja
மேலும், ஒரு யூதரின் உயிரானது ஒரு முஸ்லிமின் உயிருக்கு எப்படி சமமாகிறதோ அதே போன்று தான் ஒரு முஸ்லிமின் உயிரும் ஒரு இந்துவின் உயிருக்கு சமம். தான் குரலற்ற மக்களுக்காக குரல் கொடுப்பதாக பேசியுள்ளார். ஐசிசியின் இந்த முடிவை எதிர்த்து நான் போராட இருப்பதாக கூறியுள்ளார். இதனை அரசியலாக பார்க்க கூடாது.
Khawaja Shoe
சுதந்திரம் என்பது மனித வாழ்க்கை. அரசியலாக பார்த்தால் உங்கள் மீதுதான் குற்றம் என்று கூறியுள்ளார். உஸ்மான் கவாஜாவின் கருத்துக்கு ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் துணை கேப்டன் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Usman Khawaja Shoe
இதையடுத்து நேற்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கவாஜா கருப்பு பேண்ட் அணிந்து விளையாடியிருந்தது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமான காரணத்திற்காக உஸ்மான் கவாஜா கருப்புக் பேண்ட் அணிந்துள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவின் முதல் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். இவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.