யார் கண்ணு பட்டுச்சோ, தெரியல, கணுக்கால் காயம், நடக்க முடியாத நிலையில் சூர்யகுமார் யாதவ் – கேப்டனான ஜட்டு!

First Published Dec 14, 2023, 11:53 PM IST

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பீல்டிங்கின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் நடக்க முடியாத நிலையில், வெளியேறினார்.

Suryakumar Yadav

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், சுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திலக் வர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

Suryakumar Yadav

இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ரிங்கு சிங் களமிறங்கினார். ஆனால், அவருக்கு கிடைத்த 10 பந்துகளில் ஒரு சிக்ஸ் உள்பட 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

Latest Videos


Suryakumar Yadav Ankle Injury

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸ் உள்பட 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இது அவரது 4ஆவது டி20 போட்டி சதமாகும். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த ரோகித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் 4 சதங்கள் சாதனையை சமன் செய்தார்.

SA vs IND 3rd T20I

இறுதியாக இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கே 4 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் கிளீன் போல்டானார். ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 8 ரன்களில் முகமது சிராஜ் கையால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

Surykumar Yadav Injury

இந்த நிலையில் தான் போட்டியில் 4.1 ஆவது ஓவரின் போது பீல்டிங்கின் போது சூர்யகுமார் யாதவ்விற்கு கணுக்கால் பகுதியில் காயம் (கால் மடங்கியதால்) ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடக்க முடியாத நிலையில் உடனடியாக மைதானத்தை விட்டு சூர்யகுமார் வெளியேறினார். இதன் காரணமாக துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார். மேலும், சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக ரவி பிஷ்னோய் மாற்று வீரராக பீல்டிங் செய்தார்.

click me!