Suryakumar Yadav
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரரஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.
Shubman Gill
அதன்படி டோனோவன் ஃபெரேரா, கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், நந்த்ரே பர்கர் இந்தப் போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Suryakumar Yadav
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சுப்மன் கில் 12 ரன்கள் எடுத்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
Suryakumar Yadav 100 Runs
இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். முதலில் 34 பந்துகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
Suryakumar Yadav
ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சூர்யகுமார் யாதவ் சிக்ஸும், பவுண்டரியும் விளாசி ரன்கள் குவித்துள்ளார்.
South Africa vs India 3rd T20I
அண்டில் பெஹ்லுக்வாயோ வீசிய 13ஆவது ஓவரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 6, 4, 6, 6 என்று 22 ரன்கள் எடுத்தார். இதே போன்று அறிமுக வீரரான நந்த்ரே பர்கர் வீசிய 16ஆவது ஓவரில் 4, 6, 4 என்று ரன்கள் குவித்தார். 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், 55 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார்.
Watch SA vs IND Final T20I Live
ஜித்தேஷ் சர்மா அடித்த 18.6ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ், 19.1 ஆவது ஓவரில் 2 ரன்கள் எடுத்து டி20 போட்டியில் தனது 4ஆவது சதத்தை (117, 112*, 111*, 100) பதிவு செய்து ரோகித் சர்மா (140 இன்னிங்ஸ்), கிளென் மேக்ஸ்வெல்லின் (92 இன்னிங்ஸ்) டி20 சதங்கள் சாதனையை சமன் செய்தார். ஆனால், குறைவான இன்னிங்ஸ்களில் (57 இன்னிங்ஸ்) இந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் நிகழ்த்தியுள்ளார்.
SA vs IND 3rd T20I
ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 2ஆவது டி20 போட்டியில் ஒரு கேப்டனாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸ் உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Suryakumar Yadav
இவரைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, அடுத்து முகமது சிராஜ் பைஸ் மூலமாக 2 ரன்கள் எடுக்கவே இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. பவுலிங் தரப்பில் தென் ஆப்பிரிக்கா அணியில் கேசவ் மகாராஜ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அறிமுக வீரர் 4 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். தப்ரைஸ் ஷம்ஸி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.