#INDvsENG 2வது டி20: அதுக்குலாம் சான்ஸே இல்ல.. உத்தேச இந்திய அணி

First Published | Mar 14, 2021, 2:37 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. நல்ல ஃபார்மில் இருக்கும் ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அணியின் சிறந்த ஆடும் லெவனுடன் களமிறங்க வேண்டும்; ஃபார்மில் உள்ள நட்சத்திர வீரர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கக்கூடாது என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன.
எனவே 2வது டி20 போட்டியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படுவாரா என்று கேட்டால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் முதல் டி20 போட்டியில் டாஸ் போட்டபோதே, ரோஹித் சர்மா முதல் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று கேப்டன் கோலி தெரிவித்துவிட்டார். எனவே வலியுறுத்தல்கள் வலுத்ததாலோ, விமர்சனங்கள் எழுந்ததாலோ ரோஹித் சர்மா சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பில்லை.
Tap to resize

அதனால், இன்றைய போட்டியில் ராகுலும் தவானுமே தொடக்க வீரர்களே இறங்குவார்கள். எனவே இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவனுடன் தான் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி:கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், சாஹல்.

Latest Videos

click me!