நான் சாதாரண இடத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவன்; வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ தெரியும்..! பிரித்வி ஷா அதிரடி

First Published Mar 13, 2021, 5:20 PM IST

சாதாரண இடத்திலிருந்து வந்த தனக்கு வீழ்ச்சியிலிருந்து எப்படி மீண்டெழ வேண்டும் என்பது தெரியும் என்று பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
 

கடந்த 2 ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் சரியாக ஆடாமலோ அல்லது காயத்தால் எந்த தொடரிலும் முழுமையாக ஆடாமலோ இருந்துவந்த பிரித்வி ஷா, இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில்லிடம் இழந்தார். இந்திய அணியில் தனது இடத்தை இழந்த பிரித்வி ஷா, நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் மீண்டும் செம ஃபார்மில் ஆடி ரன்களை குவித்துவருகிறார் பிரித்வி ஷா.
undefined
நடப்பு விஜய் ஹசாரே தொடரில் செம ஃபார்மில் வெறித்தனமாக ஆடி போட்டிக்கு போட்டி சதம் விளாசி தெறிக்கவிடுகிறார். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் லீக் சுற்றில் ஒரு இரட்டை சதமும், ஒரு சதமும் அடித்த பிரித்வி ஷா, சவுராஷ்டிராவிற்கு எதிரான காலிறுதி போட்டியில் 185 ரன்களையும், கர்நாடகாவுக்கு எதிரான அரையிறுதியில் 165 ரன்களையும் குவித்து மும்பை அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்றார்.
undefined
7 போட்டிகளில் 4 சதங்களுடன், விஜய் ஹசாரே தொடரில் 754 ரன்களை குவித்து சாதனை படைத்தார் பிரித்வி ஷா. விஜய் ஹசாரே இறுதிப்போட்டி மார்ச் 14ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டியளித்த பிரித்வி ஷா, நான் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டேன். சாதாரணமான இடத்திலிருந்து வந்தவன் நான். வீழ்ச்சியிலிருந்து எப்படி மீண்டெழ வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
undefined
என்னைவிட எனது அணிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் நான். அது கிளப்பாகவோ, மும்பை அணியாகவோ அல்லது இந்திய அணியாகவோ இருந்தாலும் சரி.. எந்த அணியில் ஆடினாலும் என்னைவிட அணிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். ஒருமுறை அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டால், ஸ்கோர் செய்து கம்பேக் கொடுக்க வேண்டிய அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். நான் ஸ்கோர் செய்வதில் உறுதியாக இருக்கிறேன். நான் களத்தில் இருக்கும்போது எல்லா சூழல்களையுமே சிறப்பாக கையாள முயற்சிக்கிறேன் என்று பிரித்வி ஷா தெரிவித்தார்.
undefined
click me!