தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தி உள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 270 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆட்டம் இழந்தது. இதனை எதிர்த்து களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
23
2 அரை சதம், 1 சதம்
ஹிட்மேன் ரோகித் சர்மா 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். 121 பந்துகளை எதிர்கொண்ட அவர் 121 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். ஜெஸ்வாலுடன் கை கோர்த்த ரன் மெஷின் விராட் கோலி 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
33
தொரைக் கைப்பற்றி அசத்திய இந்தியா..
39.5 ஓவர்களில் இந்திய அணி வெறும் 1 விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில் 271 ரன்கள் குவித்து அசத்தியது. 10 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சேஸ் செய்து இந்தியா அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொரைக் கைப்பற்றி அசத்தி உள்ளது.