T20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியா அவுட்.. 'சூப்பர்' 8 சுற்றுக்கு கெத்தாக நுழைந்த ஜிம்பாப்வே!

Published : Feb 17, 2026, 06:35 PM IST

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் கிரிக்கெட்டின் அரசன் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றுடன் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

PREV
12
'சூப்பர்' 8 சுற்றுக்கு கெத்தாக நுழைந்த ஜிம்பாப்வே

T20 உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக வெளியேறியது. ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற இருந்த ஜிம்பாப்வே, அயர்லாந்து இடையிலான போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. ஓமன் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்த ஜிம்பாப்வே மொத்தம் 5 புள்ளிகளுடன் கெத்தாக அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளது.

22
T20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அவுட்

இந்த குரூப் பி பிரிவில் இலங்கை அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டது. அதே வேளையில் கிரிகெட்டில் கிங் ஆக வலம் வந்த ஆஸ்திரேலியா லீக் சுற்றிலேயே பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது. 

தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்த ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கை அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories