Suryakumar Yadav, T20 Captain
விராட் கோலியில் சாதனையை சர்வ சாதாரணமாக முறியடித்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். எப்படி என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு பிறகு அதிகளவில் பிரபலமானவர் விராட் கோலி. ரன் மெஷின் என்று அழைக்கப்படுகிறார். எல்லா சாதனை புத்தகத்திலும் விராட் கோலியின் பெயர் இடம் பெற்றிருக்கும். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகவேகமாக 27000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்தியா வந்த வங்கதேசம் விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 6 ஆம் தேதி குவாலியரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
India vs Bangladesh T20 Series
விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் மாஸ் வீரராக தற்போது சூர்யகுமார் யாதவ் அறியப்படுகிறார். டி20 கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் கோலி படைத்த சாதனையை வெறும் 3 ஆண்டுகளில் சூர்யகுமார் யாதவ் முறியடிக்க உள்ளார்.
30 வருடங்களில் அறிமுகம்:
சூர்யகுமார் யாதவின் திறமையை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. தற்போது டி20 கிங் என்று அழைக்கப்படுகிறார். இத்தனை ஆண்டுகளில் இல்லாத அதிசயமாக தேர்வாளர்கள் சூர்யகுமார் யாதவ்வின் திறமையை புரிந்து கொண்டனர். ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் அறிமுகமானார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் சாதிக்க தவறினாலும், டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
Suryakumar Yadav T20 Records
அற்புதமான ஆட்டநாயகன் விருது சாதனை:
விராட் கோலியின் உலக சாதனையை 3 ஆண்டுகளில் சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார். இப்போது வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் 10 ஆண்டுகளில் கோலி படைத்த சாதனையை 3 ஆண்டுகளில் முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 71 டி20 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 16 முறை ஆட்டநாயகன்வ் விருது வென்றுள்ளார்.
ஆனால், விராட் கோலியோ கடந்த 10 ஆண்டுகளில் 125 டி20 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இன்னும் ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டநாயகன் விருதை வென்று விட்டால் சூர்யகுமார் யாதவ் தான் டி20 கிங். இனி வரும் காலங்களில் சாதனை புத்தகங்களில் சூர்யகுமார் யாதவ்வின் பெயர் தான் இடம் பெறும். இந்த சாதனையை எந்த பேட்ஸ்மேனும் எட்டுவது சாத்தியமில்லை. எனினும், இந்த மைல்கல்லை ஸ்கை மிக விரைவாக எட்டினார்.
Suryakumar Yadav
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கேப்டனுக்கான அஸ்திவாரம்:
இனிவரும் ஒவ்வொரு டி20 தொடர்களிலும் ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் வெற்றி பெறும்பட்சத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கை சென்ற இந்திய அணி விளையாடிய டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் வென்று கொடுத்தார். ஆனால், ஒருநாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இதையடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதன் மூலமாக இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு அளிக்கப்படும்.
IND vs BAN T20 Series
இந்திய அணி டி20 உலகக் கோப்பை கைப்பற்ற ஒருவகையில் சூர்யகுமார் யாதவ்வும் காரணம் தான். எப்படி என்றால் டேவிட் மில்லரது அந்த கேட்சை சூர்யகுமார் யாதவ் பிடிக்கவில்லை என்றால் பந்து சிக்ஸருக்கு சென்றிருக்கும். அடுத்த பந்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இது எதுவுமே அன்று நடைபெறவில்லை.
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரைத் தொடர்ந்து இந்தியாவின் டி20 டூர்
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் – 4 டி20 போட்டிகள் (நவம்பர் 8 முதல் நவம்பர் 15 வரை)
இந்தியா வரும் இங்கிலாந்து – 5 டி20 போட்டிகள் (ஜனவரி 22 முதல் பிப்ரவரி 02 வரை)