IPL 2025: தோனிக்கு அன்கேப்டு ஃபார்முலா? சிஎஸ்கே காப்பாற்ற பார்க்கும் அந்த 6 வீரர்கள் யார் யார்?

First Published | Oct 3, 2024, 6:58 AM IST

ஐபிஎல் 2025க்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை சிஎஸ்கே வெளியிட உள்ள நிலையில், தோனியை அன் கேப்டு வீரராக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CSK, IPL 2025

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மாவிற்கு நிகராக 5 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிராபி வென்று கேப்டன் என்ற பெயரை பெற்றவர் சிஎஸ்கேயின் ஒரே ஒரு ஜாம்பவான் எம்.எஸ்.தோனி. 2023 ஆம் ஆண்டு கடைசியாக ரவீந்திர ஜடேஜா அடித்த பவுண்டரியால் சிஎஸ்கே 5ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. அந்த தருணத்தை இன்றும் சிஎஸ்கே ரசிகர்களால் மறக்கவே முடியாது. மேலும், சிஎஸ்கேவிற்கு டிராபி வென்று கொடுத்த தளபதி ஜடேஜாவை தோனி தனது தோளில் சுமந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க செய்தது.

Chennai Super Kings, IPL 2025 Retentions

ஆனால், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். எனினும் களத்தில் மாஸ் நம்ம கேப்டன் தோனி தான். பீல்டிங் செட் பண்ணுவது முதல் யாரை பவுலிங் செய்ய வைப்பது வரை பிளான் போடுவது எல்லாம் தோனியின் ஐடியா. வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்வது ருதுராஜ். இந்த தொடரில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து கடைசி அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இதைத் தொடர்ந்து தற்போது 2025 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக அக்டோபர் 31 ஆம் தேதிக்குள்ளாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய ஐபிஎல் விதிமுறையின்படி ஆர்டிஎம் உள்பட ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


Chennai Super Kings, MS Dhoni

தக்க வைக்கப்படும் 6 வீரர்கள் அல்லது ஆர்டிஎம் முறையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்கள் மற்றும் அதிகபட்சமாக 2 அன்கேப்டு வீரர்கள் இருக்கலாம். ஒவ்வொரு அணியும் இந்த விதிமுறையை பின்பற்றினாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனியைப் போன்று வித்தியாசமான முறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, சிஎஸ்கே 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐபிஎல் 2025க்கு, ஒவ்வொரு உரிமையாளருக்கும் ஏல பர்ஸ் தொகை கடந்த ஆண்டை விட ரூ.20 ஓடி அதிகரித்து ரூ.120 கோடியாக உள்ளாது. ஒவ்வொரு அணியும் ஆர்டிஎம் முறை உட்பட 6 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதில், மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக மொத்தமாக வீரர்களை தக்க வைக்கலாம். அல்லது, ஏலத்தின் போது தங்களது அணி வாங்க நினைத்த வீரரை ஆர்டிஎம் முறை மூலமாக வாங்கிக் கொள்ளலாம். அப்படியும் இல்லை என்றால் RTM மூலமாக வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

CSK Retained Players

ஐபிஎல் 2025 தொடருக்கான புதிய விதிகளின்படி, தக்க வைக்கப்படும் கேப்டு வீரர்களுக்கு ரூ.75 கோடியும், அன்கேப்டு வீரர்களுக்கு ரூ.4 கோடியும் அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எஞ்சிய வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.41 கோடி வரையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதல் 3 வீரர்கள் முறையே ரூ.18 கோடி, ரூ.14 கோடி மற்றும் ரூ.11 கோடி பெறுவார்கள். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் கேப் செய்யப்பட்ட வீரர்களையும் அணி தக்க வைத்துக் கொண்டால், அந்த வீரர்களுக்கு முறையே ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடி செலுத்த வேண்டும்.

ஒரு அணியானது குறைந்தது 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் அவர்கள் ரூ.120 கோடியிலிருந்து ரூ.75 கோடி வரையில் செலவிட நேரிடும். எஞ்சிய ரூ.45 கோடியைத் தான் மற்ற வீரர்களை ஏலம் எடுக்க பயன்படுத்த முடியும்.

CSK Retained Players, Shivam Dube RTM, MS Dhoni Uncapped Player

அதன்படி பார்த்தால் சிஎஸ்கே 3 கேப்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும். அவர்கள் முறையே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோ மட்டுமே. இதில், தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவரை அன்கேப்டு வீரராக சிஎஸ்கே பயன்படுத்த விரும்பினால் அவருக்கு ரூ.4 கோடி வரையில் செலவு செய்தாலே போதுமானது.

ஷிவம் துபேவுக்கு ஆர்டிஎம்:

தற்போது 3 கேப்டு வீரர்கள் மற்றும் ஒரு அன்கேப்டு வீரர்களின் படி பார்த்தால் சிஎஸ்கே ரூ.47 கோடி செலவிட முடியும். எஞ்சிய ரூ.73 கோடி ஏலத்திற்கு உள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் போது ஆல்-ரவுண்டரான ஷிவம் துபேவை விடுவித்து, ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலமாக திரும்ப பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது.

அதாவது ஒரு அணி விடுவிக்கும் வீரரை ஏலத்தின் போது மற்றொரு அணி வாங்கினால், அந்த வீரரை ஆர்டிஎம் மூலமாக மீட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே இந்த முறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RTM ஆனது, ஏலத்தின் போது மற்றொரு உரிமையாளரால் வாங்கப்பட்டாலும், எந்த அணியும் அது வெளியிட்ட ஒரு வீரரை மீட்டெடுக்க அனுமதிக்கிறது. துபேக்கு கூடுதலாக, CSK அதன் RTM விருப்பங்களில் ஒன்றை மற்றொரு வீரருக்கும் பயன்படுத்தலாம்.

click me!