ஏமாற்றிய ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் – பஞ்சாப்பிற்கு ஆட்டம் காட்டிய நிதிஷ் ரெட்டி – SRH 182 ரன்கள் குவிப்பு!

First Published | Apr 9, 2024, 9:42 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 23ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்துள்ளது.

PBKS vs SRH 23rd IPL 2024

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 23 ஆவது லீக் போட்டி தற்போது முல்லன்பூரில் நடைபெற்ற்ய் வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார்.

PBKS vs SRH 23rd IPL 2024

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை கஜிஸோ ரபாடா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் கேட்ச் ஆனார்.

Tap to resize

PBKS vs SRH, Nitish Reddy

ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பஞ்சாப் வீரர்கள் ரெவியூ கேட்கவில்லை. அதன் பின்னர் டிவி ரீப்ளேயில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. எனினும், அவர் 21 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த எய்டன் மார்க்ரம் 2 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

PBKS vs SRH, Arshdeep Singh

அதிரடிக்கு பெயர் போன ஹென்ரிச் கிளாசென் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ராகுல் திரிபாதி 11 ரன்களில் வெளியேறினார். எனினும், கடைசி வரையில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் அரைசதம் ஆகும் மேலும், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள முதல் அரைசதம் ஆகும்.

PBKS vs SRH, Nitish Reddy

அப்துல் சமாத் 25 ரன்கள் எடுக்க, ஷாபாஸ் அகமது 14 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த ஜெயதேவ் உனத்கட் கடைசி பந்தில் ஒரு சிக்ஸ் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

PBKS vs SRH

பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரபாடா ஒரு விக்கெட் எடுத்தார்.

Latest Videos

click me!