
கடந்த 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினார்.
இதே போன்று வங்கதேச அணிக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரையில் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் 6,793 ரன்கள் எடுத்துள்ளார்.இதில், 17 சதங்களும், 39 அரைசதங்களும் அடித்துள்ளார்.
ஷிகர் தவான் கிரிக்கெட்
இதே போன்று, 68 டி20 போட்டிகளில் விளையாடி1759 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 11 அரைசதங்கள் அடங்கும். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவருக்கு பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தமும் மறுக்கப்பட்டுள்ளது. வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. தற்போது ஷிகர் தவான் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வருகிறார்.
ஷிகர் தவான் நிகர சொத்து மதிப்பு:
கடந்த மார்ச் மாத கணக்கின்படி ஷிகர் தவானின் நிகர சொத்து மதிப்பு ரூ.120 கோடி ஆகும். ஆனால் அதற்கு முன்னதாக ரூ.125 கோடியாக இருந்தது. பிசிசிஐயின் ஒப்பந்தம் மூலமாக ரூ.5 கோடி பெற்று வந்தார். ஆனால், நடப்பு ஆண்டுக்கான ஒப்பந்த படியலிலிருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான் பிராண்ட்
தற்போது துறைகளிலிருந்து பிராண்ட் ஒப்பந்தம் பெற்று வருகிறார். அதில், ஜியோ, நெரோலாக் பெயிண்ட்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சாஹி ஹை, ஜிஎஸ் கால்டெக்ஸ், ஃபேன்டஸி கிரிக்கெட் அப்ளிகேஷன் ட்ரீம் 11, ஜீரோ ரிஸ்க், ஃபீவர் எஃப்எம், டிபி டிக்சன், குர்குரே, லேஸ், ஓப்போ, நெரோலாக், ஸ்டான்ஸ்பீம், போட், ஐஎம்ஜி ரிலையன்ஸ், ஏரியல் இந்தியா, ஆல்சிஸ் ஸ்போர்ட்ஸ், வி ஸ்டார் ஆகியவை அடங்கும்.
ஷிகர் தவான் பிராண்ட்:
இந்த நிறுவனங்களைத் தவிர, கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷிகர் தவான், தனது முன்னாள் மனைவியுடன் இணைந்து தொடங்கிய DaONE Home இன் உரிமையாளர் மற்றும் பிராண்ட் தூதராகவும் உள்ளார். இந்த ஆண்டு ராம்சன்ஸ் பெர்ஃப்யூம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு நாள் வாலா டியோ-ன் பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த பிராண்டுடன் அவர் 3ஆவது முறையாக இணைந்துள்ளார்.
ஷிகர் தவான் முதலீடு:
சர்வா எனப்படும் யோகா மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ஸ்டார் அப்பில் முதலீடு செய்துள்ளார். இது தவிர, அப்ஸ்டாக்ஸ் என்ற ஆன்லைன் பங்கு வர்த்தக பயன்பாட்டிலும் முதலீடு செய்துள்ளார். கூடுதலாக, தவான், டா ஒன் குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார். இதில், அவர் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை மூலதனமாக செலவிட்டுள்ளார்.
ஷிகர் தவான் வீடு:
ஷிகர் தவானுக்கு டெல்லி மற்றும் மும்பையில் ஆடம்பரமான சொகுசு வீடு உள்ளது. அதன் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். மேலும், குருகிராமில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். இது தவிர ஆஸ்திரேலியாவில் உள்ள கிளைட் நார்த் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி வீட்டை ரூ.6.7 கோடி கொடுத்து வாங்கி அதிக விலைக்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.5.20 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஷிகர் தவான், 2019 முதல் 2021 வரையில் ரூ.5.20 கோடிக்கு டெல்லி அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2022 முதல் ரூ.8.25 கோடிக்கு விளையாடி வருகிறார்.
ஷிகர் தவான் கார் கலெக்ஷன்:
ஷிகர் தவானுக்கு மெர்சிடெஸ், ஆடி உள்ளிட்ட பெரிய பிராண்டுகளின் கார்கள் மீது அதிக விருப்பம். ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 6 ஜிடி, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ், ரூ.2.18 கோடி மதிப்பிலா பிஎம்டபிள்யூ எம்8 கூபே உள்பட ஏராளமான கார்கள் வைத்துள்ளார். ஆடம்பர சொகுசு கார்களுக்கு என்று ரூ.3.5 கோடி வரையில் செலவு செய்கிறார்.