முல்லன்பூரில் 2ஆவது போட்டி – டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் – SRH ஜெயிக்க 50 சதவிகிதம் வாய்ப்பு!

First Published | Apr 9, 2024, 7:40 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

Pat Cummins, SRH

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 23 ஆவது லீக் போட்டி தற்போது முல்லன்பூரில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Shikhar Dhawan Won the Toss

பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுவரையில் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

Tap to resize

PBKS vs SRH, Mullanpur

இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுவரையில் ஹைதராபாத் அணி விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

Punjab Kings vs Sunrisers Hyderabad

இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் மைதானம் என்பதாலும், ஹோம் அணி வெற்றி பெற்று வரும் டிரெண்ட் அடிப்படையிலும் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெறுவதற்கு 70 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.

Sunrisers Hyderabad, IPL 2024

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அஷுடோஷ் சர்மா, சாம் கரண், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராஸா, ஹர்ப்ரீத் பிரா, ஹர்ஷல் படேல், கஜிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

Punjab Kings, IPL 2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், டி நடராஜன்.

PBKS vs SRH 23rd IPL Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 21 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் பஞ்சாப் 3 போட்டியிலும், ஹைதராபாத் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

PBKS vs SRH 23rd IPL Match 2024, Mullanpur

இந்த சீசனில் நடந்த போட்டிகளின்படியும், ஹோம் அணி வெற்றி என்ற டிரெண்ட் அடிப்படையிலும், இதுவரையில் இரு அணிகளும் மோதிய போட்டிகளின் அடிப்படையிலும் பஞ்சாப் வெற்றி பெற 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. இதே போன்று ஹைதராபாத் வெற்றி பெற 50 சதவிகித வாய்ப்பு உள்ளது.

Latest Videos

click me!