MS Dhoni, Chennai Super Kings
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் நைடர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். இதில், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Dhoni and Gambhir - 2011 Cricket World Cup
முஷ்தாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் (9) கைப்பற்றிய வீரருக்கான பர்பிள் கேப் வென்றார். மகீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட் கைப்பற்றினார். பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
MS Dhoni and Ruturaj Gaikwad
அடுத்து ருத்ராஜ் கெய்க்வாட் உடன் டேரில் மிட்செல் இணைந்து நிதானமாக விளையாடினார். இதில், மிட்செல் 25 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிவம் துபே களமிறங்கினார். இதில் அதிரடியாக விளையாடிய துபே 18 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் சிஎஸ்கேயின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை இருந்த நிலையில், தோனி களமிறங்கினார். ஆனால், 3 பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
MS Dhoni and Gautam Gambhir
கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு கேப்டனாக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தோனி ஒரு கேப்டனாக 21 அரைசதங்கள் அடித்துள்ளார். கடைசியில் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
MS Dhoni, Chennai Super Kings
இந்த நிலையில் இந்தப் போட்டியில் கெய்க்வாட் அரைசதம் அடித்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் அடித்த முதல் சிஎஸ்கே கேப்டன் என்ற சாதனையை கெய்க்வாட் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் தேதி தோனி அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
MS Dhoni
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு கேப்டனாக எம்.எஸ்.தோனி சிஎஸ்கே அணிக்காக அரைசதம் அடித்திருந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கேயின் முதல் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
dhoni and gambhir
இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. மேலும், ஹோம் மைதானத்தில் 3ஆவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக கொல்கத்தா 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kolkata Knight Riders
இந்த நிலையில் தான் போட்டிக்கு பிறகு தோனி மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற முக்கிய காரணமே தோனி மற்றும் காம்பீர் தான். இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை 274 ரன்கள் குவித்தது.
CSK vs KKR, 22nd IPL 2024
பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு சேவாக் 0, சச்சின் 18, கோலி 35 என்று ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு எம்.எஸ்.தோனி மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 277 ரன்கள் குவித்து உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றி சாதனை படைத்தது.