ரெக்கார்டை மாற்றி எழுதி SRH புதிய சரித்திரம்– முதலில் மும்பை, இப்போ ஆர்சிபியை கண்ணீர் சிந்த வைத்த SRH!

First Published Apr 15, 2024, 10:30 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 30ஆவது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ரன்கள் குவித்து தனது வரலாற்று சாதனையை தானே மாற்றி எழுதி ஹைதராபாத் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 30ஆவது லீக் போட்டி தற்போது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

அதன்படி ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினார். இந்தப் போட்டியில் முதல் பவர்பிளேயில் ஹைதராபாத் 76 ரன்கள் குவித்திருந்த நிலையில், 7.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய ஹெட் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். மேலும், ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு, ஐபிஎல் கிரிக்கெட்டில் இதற்கு முன்னதாக அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

Travis Head 102 Runs

இறுதியாக ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் களமிறங்கினார். ஹெட்டைத் தொடர்ந்து அதிரடியை கையில் எடுத்துக் கொடுத்த கிளாசென் தன் பங்கிற்கு சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Travis Head

இதன் மூலமாக அதிவேகமாக 200 ரன்களை கடந்தது. இதற்கு முன்னதாக மும்பைக்கு எதிரான போட்டியில் 14.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்த நிலையில், இந்தப் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக 14.6 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது.

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

கடைசியில் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அப்துல் சமாத் களமிறங்கினார். அதன் பிறகு ஹைதராபாத் சற்று தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்து புதிய சரித்திரம் படைத்தது.

IPL 2024, RCB vs SRH

அப்துல் சமாத் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 37 ரன்களுடனும், எய்டன் மார்க்ரம் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ரன்கள் எடுத்ததன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8ஆவது ஐபிஎல் போட்டியில் படைக்கப்பட்ட அதிக ரன்கள் சாதனையை தானே முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 2 முறை அதிக ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது.  

click me!