இந்தியா அனுப்பிய அணி குறித்த ரணதுங்காவின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி

First Published | Jul 3, 2021, 2:55 PM IST

இந்தியா 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியதாக இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறிய கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.
 

விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
Tap to resize

வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார்.
ரணதுங்காவின் கருத்துக்கு பதிலளித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்திய அணி இலங்கைக்கு அனுப்பியுள்ள 20 வீரர்களில் 14 வீரர்கள் ஏற்கனவே இந்தியாவிற்காக ஆடிய வீரர்கள். இந்தியா அனுப்பிய அணி 2ம் தர அணி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐசிசி புதிய விதிப்படி, வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு ஸ்பெஷலிஸ்ட் அணியை வைத்துக்கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.

Latest Videos

click me!