சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்ற சுப்மன் கில் – பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் கில்!

Rsiva kumar   | ANI
Published : Mar 12, 2025, 05:56 PM IST

Shubman Gill Won ICC Mens Player of the Month awards : இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார்.

PREV
18
சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்ற சுப்மன் கில் – பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் கில்!

Shubman Gill Won ICC Mens Player of the Month awards : பாகிஸ்தான் நடத்திய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 2025 இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3ஆவது முறையாக சாம்பியனானது. இந்த டிராபி தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இடம் பெற்று விளையாடினார்.

28
Shubman Gill Cricket Records, Cricket News Tamil

அவர் 5 போட்டிகளில் விளையாடி முறையே 101, 46, 2, 8, 31 ரன்கள் என்று மொத்தமாக 188 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் கில் 406 ரன்கள் குவித்துள்ளார். இதில் சராசரியாக 101.50 மற்றும் 94.19 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார்.

38
Shubman Gill Cricket Career

இந்தியா வந்த இங்கிலாந்திற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கில் கடந்த மாதத்தில் முறையே 87, 60, 112 ரன்கள் என்று மொத்தமாக 259 ரன்கள் எடுத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நாக்பூரில் 87 ரன்கள் எடுத்ததன் மூலம் நம்பிக்கையுடன் தொடங்கினார்.

48
ICC Mens Player of the Month for February

அதைத் தொடர்ந்து கட்டாக்கில் 60 ரன்கள் எடுத்தார். அகமதாபாத்தில் ஒரு சதம் அடித்து பிரமாண்டமாக முடித்தார். அவர் அடித்த 112 ரன்களில் 102 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார், அதில் 14 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இந்த இன்னிங்ஸுக்காக கில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார், மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

58
ICC Mens Player of the Month

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் தனது பொன்னான ஆட்டத்தை தொடர்ந்த கில், துபாயில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் சேஸிங்கில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 46 ரன்கள் எடுத்தார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய எல்லா போட்டிய்லும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் கடந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான ஐசிசி விருது சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது.

68
Champions Trophy 2025, ICC Cricket Awards

கில்லுக்கு இது மூன்றாவது ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருது ஆகும், இதற்கு முன்பு 2023 ஜனவரி மற்றும் செப்டம்பரில் இரண்டு முறை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ் ஆகியோரை வீழ்த்தி இந்த விருதை கில் வென்றார். கடந்த வாரம் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் கில் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

78
Gill ICC Award, ICC Champions Trophy 2025

ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்ற சுப்மன் கில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு எனது நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெறுவதை விட வேறு எதுவும் எனக்கு பெரிதாக இருக்க போவதில்லை.

88
Shubman Gill ICC Award

சாம்பியன்ஸ் டிராபி 2025 வரையில் முன்னணியில் இருப்பது என்பது மிகவும் முக்கியமானது, அதை நான் அதிகம் பயன்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு தனிப்பட்ட முறையிலும், ஒரு குழுவாகவும் எங்களுக்கு ஒரு அற்புதமான தொடக்கமாக அமைந்தது. இதே போன்று தான் இனி வரும் காலங்களிலும் அதிரடி கிரிக்கெட் ஆண்டை தான் நான் எதிர்நோக்குகிறேன். மேலும் இந்தியாவுக்காக இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories