Shubman Gill ICU Update: Latest Health Condition: கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் இந்திய கேப்டன் சுப்மன் கில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அப்டேட் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்து வரும் நிலையில், இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 93/7 என தத்தளித்து வருகிறது.
24
சுப்மன் கில் ICU-வில் அனுமதி
தென்னாப்பிரிக்கா அணி 63 ரன்கள் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில், அந்த அணியை சீக்கிரம் ஆல் அவுட்டாக்கி இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த போட்டியில் காயம் அடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழுத்தில் தசைப்பிடிப்பு
அதாவது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஸ்பின் பந்தை ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தபோது வலியால் துடித்தபடி தனது கழுத்தைப் பிடித்துக்கொண்டார். கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இதனால் இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் களமிறங்க மாட்டார்.
34
டாக்டர்கள் குழு தீவிர கண்காணிப்பு
ரெவ்ஸ்போர்ட்ஸின் கூற்றுப்படி சுப்மன் கில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டர் சப்தர்ஷி பாசுவின் மேற்பார்வையின் கீழ் ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ குழுவில் ஒரு தீவிர சிகிச்சை நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர் மற்றும் இருதயநோய் நிபுணர் ஆகியோர் உள்ளனர்.
சுப்மன் கில்லுக்கு வலி அதிகமானதால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது அவர் சரியான நேரத்தில் உடல் தகுதி பெறுவாரா? என்பதை கணிக்க முடியாது.
இருப்பினும் அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக குணமடைவார் என நம்புவதாகவும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கவுகாத்தியில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட்டிலும் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் தான்.