ஹெலிகாப்டரே நிறுத்தி வைக்கலாமா? அம்மாவுக்காக அவ்வளவு பெரிய வீடு வாங்கிய ஷ்ரேயாஸ் ஐயர்: எத்தனையோ கோடி?

First Published | Sep 27, 2024, 9:32 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரது தாயார் ரோகிணி ஐயர் சமீபத்தில் மும்பை வொர்லியில் ரூ.2.90 கோடிக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளனர். இந்த புதிய சொத்து வாங்குதலுடன், ஷ்ரேயாஸ் ஐயரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58 கோடியாக உயர்ந்துள்ளது.

Shreyas Iyer New House

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த கேப்டன் பொறுப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் 3ஆவது முறையாக டிராபி வென்று கொடுத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியானது 3ஆவது முறையாக டிராபி வென்றது. இதையடுத்து 18ஆவது சீசனுக்காக தயாராகி வருகிறது.

Shreyas Iyer and His Mother Rohini Iyer

கேகேஆர் அணியின் ஆலோசகராக சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளரான டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பிராவோ தலைமையில் கேகேஆர் யாரை தக்க வைத்துக் கொள்ளலாம், யாரை விடுவிக்கலாம் என்று அணி நிர்வாகம் ஆலோசிக்க இருக்கிறது.

கேகேஆர் அணியைப் பொறுத்த வரையில் கடந்த சீசனில் சொதப்பிய வெங்கடேஷ் ஐயர் விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், ஷ்ரேயாஸ் ஐயர், சுனில் நரைன், ரிங்கு சிங் ஆகியோர் தக்க வைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போது தலைப்புச் செய்தியாக ஷ்ரேயாஸ் ஐயர் வந்துள்ளார்.


Shreyas Iyer Worli House Mumbai

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரது தாயார் ரோகிணி ஐயர் சமீபத்தில் மும்பை வொர்லியின் மையப்பகுதியில் 525 சதுர அடி கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ரூ.2.90 கோடிக்கு வாங்கியுள்ளனர். இந்த பரிவர்த்தனை, செப்டம்பர் 19, 2024 அன்று பதிவு செய்யப்பட்டது. ஜாப்கி பெற்ற சொத்து பதிவு ஆவணங்கள் மூலம் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால் பரவலான கவனத்தை ஈர்த்தது.

விற்பனை ஆவணத்தில் ஜூலை 16 ஆம் தேதி கையெழுத்தானது. பதிவுகளின்படி, இந்த சொத்து மும்பை வொர்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் உள்ள கோதாவரி இண்டஸ்ட்ரியல் CHSL கட்டிடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மும்பையில் லோதா வேர்ல்டு டவரில் ரூ.11.85 கோடிக்கு ஆடம்பரமான சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடியிலிருந்து ரூ.58 கோடியாக உயர்ந்துள்ளது.

Shreyas Iyer Mumbai House

கார் கலெக்‌ஷன்:

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் கார் மற்றும் பைக் பிரியர்களாக இருப்பார்கள். அவர்களின் ஒருவர் தான் ஷ்ரேயாஸ் ஐயர். இவரிடம், ரூ.2.25 கோடி மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, லம்போர்கினி ஹூராகன் மற்றும் ஆடி எஸ்5 ஆகிய கார்களையும் வைத்திருக்கிறார்.

பிசிசிஐ ஒப்பந்தம் இல்லை:

கடந்த பிப்ரவரி மாதம் பி கிரேடு ஒப்பந்தத்திலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன்னதாக 2022-23 ஆம் ஆண்டுகளில் பி கிரேடு மூலமாக வருடத்திற்கு ரூ.3 கோடி வரையில் வருமானம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shreyas Iyer Mumbai Property

ஐபிஎல் வருமானம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்த ஓரிரு வருடங்களில் ரூ.7 கோடிக்கு விளையாடி வந்தார். இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ரூ.12.25 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை ஏலம் எடுத்தது. 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வந்தார். ஐபிஎல் மூலமாக தற்போது வரையில் ரூ.72.55 கோடி வருமானம் பெற்றிருக்கிறார்.

பிராண்ட் ஒப்பந்தம்:

பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். மேலும், போட், மான்யவார் மற்றும் டிரீம் 11 ஆகிய நிறுவனங்களுக்கு பிராண்ட் ஒப்பந்தம் பெற்றுள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!