நடிகர் அஜித் மாதிரி வலியை வென்ற ஜாம்பவான்: பல், மண்டை உடைந்தும் அணியின் வெற்றிக்காக போராடிய வீரர்!

First Published | Sep 27, 2024, 6:33 PM IST

Mohinder Amarnath: 1970 மற்றும் 1980களில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காலகட்டத்தில், மொஹிந்தர் அமர்நாத் தனது தைரியத்தால் அனைவரையும் வியக்க வைத்தார். உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, உடல் வலியை பொருட்படுத்தாமல் விளையாடி, 1983 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.

Mohinder Amarnath

1970 மற்றும் 1980களில் கிரிக்கெட்டை இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது எளிதானது கிடையாது. இப்போதெல்லாம், கிரிக்கெட் வீரர்கள் தங்களை காயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான விளையாட்டு உபகரணங்களைக் கொண்டுள்ளனர். ஆனால் 1970, 80ஆம் ஆண்டுகளில் எந்தவித தற்காப்பு உபகரணங்கள் இல்லாமல் ஏராளமான பேட்ஸ்மேன்கள் கிரீஸில் உயர்ந்து நின்றனர்.

சரி, அப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேன் இருந்தரா என்று கேட்டால், இருந்தார். அவர் தான் மொஹிந்தர் அமர்நாத். வலி என்பதை மறந்து எக்ஸ்பிரஸ் வேகப் பந்துவீச்சில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படுவதற்கு தனது உடல் மொழியால் பேசினார்.

Mohinder Amarnath

விளையாட்டின் உண்மையான ஜாம்பவான் மற்றும் கற்பனை செய்ய முடியாத வலியைத் தாங்குவதில் பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவுக்காக 1983 உலகக் கோப்பை வென்று கொடுத்தார். கடந்த செப்டம்பர் 24, 2024 அன்று 74 வயதை எட்டினார். கடந்த 70 மற்றும் 80களில் சிறந்த பந்துவீச்சாளர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ, ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சன் மற்றும் பாகிஸ்தானின் ஆல்-டைம் ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான இம்ரான் கான் ஆகியோரை நினைத்துப் பாருங்கள்.

Latest Videos


1983 ODI World Cup

அவர்களை விடுங்கள், வேகப்பந்து வீச்சாளர்களான மெக்ராத், சோயிப் அக்தர், பிரெட் லீ ஆகியோர் பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா. அவர்களைப் போன்று தான் 70 மற்றும் 80களில் இருந்த பவுலர்கள். ஆனால், அவர்களை எல்லாம் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொண்டு விளையாடினார். எனினும், மண்டையும் உடைந்தது, பல்லும் உடைந்தது.

ஹேட்லீயால் மண்டை உடைந்ததில் இருந்து தப்பினார், மார்ஷலால் பல் உடைந்தது. மைக்கேல் ஹோல்டிங், அவரை தையல்களுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார். இம்ரான் கான் அவரை மயக்கமடைய செய்தார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், அந்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார், பாகிஸ்தானில் மூன்று சதங்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு சதங்களும், ஆஸி.க்கு எதிராக ஒரு சதமும் அடித்துள்ளார்.

ODI World Cup 1983

அவர் இந்தியாவுக்காக மொத்தம் 154 போட்டிகளில் விளையாடி, 13 சதங்களுடன் 6302 ரன்களை எடுத்தார். 83' கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதி போட்டி இரண்டிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதிப் போட்டியில் 92 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று பவுலிங்கில் 12 ஓவர்கள் வீசிய மோஹிந்தர் சர்மா ஒரு மெய்டன் உள்பட 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

Mohinder Amarnath

இந்தப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இதில், மோஹிந்தர் அமர்நாத் 80 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஹோல்டிங் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், பவுலிங்கில் தனது சிறப்பை வெளிப்படுத்தினார். 7 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றி சரித்திரம் படைத்தது.

click me!