சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சனைப் பெற ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏனெனில் ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர இன்னும் சில நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை அணி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து சஞ்சுவை பெற திட்டமிட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் சாத்தியமாகவில்லை. ஏனெனில் ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவரை விடாமல் இங்கிலாந்து வீரர் சாம் கரனை சேர்க்க முடியாது.
24
சாம் கரன் பிரச்சனை
மேலும், சாம் கரனின் சம்பளமும் ஒரு பிரச்சனை. அவர் சென்னையில் ரூ.2.4 கோடி சம்பளம் பெறுகிறார், ஆனால் ராஜஸ்தான் அணிக்கு தற்போது ரூ.30 லட்சம் மட்டுமே உள்ளது. இதனால், அவரை வாங்க ராஜஸ்தான் சில வீரர்களை விற்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது, சென்னை அணியில் ஜடேஜா மற்றும் கரனும், ராஜஸ்தானில் இருந்து சஞ்சுவும் ஒப்புதல் அளித்துள்ளனர். BCCI மற்றும் ECB அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தம் நிறைவேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
34
சிஎஸ்கே ராஜஸ்தான் பரிமாற்றம்
இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சமூக வலைதளத்தில் “விசில் போடு” ஹாஷ்டேக்குடன் சஞ்சுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த பதிவு வைரலாகி, ரசிகர்கள் சஞ்சு சென்னைக்கு வரப்போகிறார் என நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும் சஞ்சுவுக்கு வாழ்த்து தெரிவித்தன. அணிகள் தங்கள் ரிட்டெய்ன் பட்டியலை டிசம்பர் 15க்குள் அறிவிக்க வேண்டும்.
அதற்கு முன்பே சஞ்சுவின் பரிமாற்றம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சென்னை அணி அஷ்வினுக்குப் பதிலாக வாஷிண்டன் சுந்தரை பெற முயன்றது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த கோரிக்கையை நிராகரித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.