”தல” தோனியின் தலையெழுத்தையே மாற்றிய சம்பவம்..! நிறைய பேருக்கு தெரியாத விஷயம்

First Published Sep 12, 2020, 4:46 PM IST

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு சிஎஸ்கேவில் நடந்த பெரும்பாலானோருக்கு தெரிந்திராத விஷயத்தை சிஎஸ்கே மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. இதுவரை மொத்தமாக 12 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், அதில் 10 சீசன்களில் ஆடிய சிஎஸ்கே, அனைத்து முறையுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றிருப்பதுடன், 8 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி, அதில் 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளது.
undefined
ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டும்தான். ஐபிஎல்லில் இப்படியாக சிஎஸ்கே மிகப்பெரிய அளவில், வெற்றிகரமான அணியாக கோலோச்சுவதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் கேப்டன் தோனி.
undefined
தோனி 2008லிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவருகிறார். சிஎஸ்கே தடையில் இருந்த 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலுமே சிஎஸ்கேவிற்காக மட்டுமே ஆடிவரும் தோனி, சென்னையின் செல்லப்பிள்ளையாகவே மாறிப்போனார்.
undefined
தோனியின் சாமர்த்தியமான கேப்டன்சி, திறமையான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என அனைத்து வகையிலும், சிஎஸ்கேவிற்கு தனது முழு பங்களிப்பை அளித்துவருகிறார். சிஎஸ்கே வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு தோனி தான் முக்கிய காரணம்.
undefined
தோனிக்கு சிஎஸ்கே அணிக்கும் இடையே இருக்குமளவிற்கு வேறு எந்த வீரருக்கும் அவர் ஆடும் அணிக்கும் இடையேயான உறவு இருப்பதாக சொல்ல முடியாது.
undefined
தோனியே தனது இரண்டாவது தாய்வீடு சென்னைதான் என்று கூறியிருக்கிறார். தோனியை தமிழ் ரசிகர்கள் செல்லமாக தல என அழைக்க ஆரம்பிக்க, இன்று உலகம் முழுதும் உள்ள தோனி ரசிகர்கள் அவரை தல என அழைக்கின்றனர்.
undefined
ஆனால் சிஎஸ்கே அணி, ஐபிஎல் ஆரம்பித்த 2008ம் ஆண்டில் தோனியை எடுக்கும் ஐடியாவிலேயே இல்லை. சேவாக்கை எடுக்கும் ஐடியாவில் தான் சிஎஸ்கே அணி நிர்வாகம் இருந்தது. இந்த தகவலை ஏற்கனவே என்.ஸ்ரீநிவாசன் மற்றும் தோனியை சிஎஸ்கே எடுக்க காரணமாக இருந்த விபி.சந்திரசேகர் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.
undefined
இப்போது அதே தகவலை பத்ரிநாத்தும் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு சிஎஸ்கே நிர்வாகம் சேவாக்கைத்தான் எடுக்க நினைத்தது.
undefined
ஆனால் சேவாக், அவரது சொந்த ஊரான டெல்லி அணியில் ஆட விரும்பியதால், அப்போதைக்கு வேறு யாரை எடுக்கலாம் என்று யோசித்த சிஎஸ்கே, அதற்கு சில மாதங்களுக்கு முன் டி20 உலக கோபையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் தோனியை எடுத்தது. 2008ல் தோனி ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் தோனி தான் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர். சிஎஸ்கே முதலில் சேவாக்கைத்தான் எடுக்க நினைத்தது என்ற தகவல் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
undefined
click me!