சிக்ஸர் மழை.. யுனிவர்ஸ் பாஸ் கெயிலை முந்திய WI வீரர்.. டி20 கிரிக்கெட்டில் பவல் புதிய சாதனை!

Published : Mar 01, 2026, 10:00 PM IST

T20 World Cup 2026: நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் பவல் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 29.80 சராசரியுடன் 149 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும்.

PREV
13
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவல் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் பேட்டர் ரோவ்மன் பவல், தனது அணிக்காக 150 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 டி20 உலகக் கோப்பை போட்டியில் பவல் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் பவல் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 178-க்கும் அதிகமாக இருந்தது.

23
நிக்கோலஸ் பூரனை முந்தினார்

ரோவ்மன் பவல் சரியாக 150 சிக்ஸர்களுடன் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை (106 போட்டிகளில் 149 சிக்ஸர்கள்) முந்தினார். பவல், 117 போட்டிகளில் 103 இன்னிங்ஸ்களில் 25.98 சராசரியுடன் 2,261 ரன்கள் எடுத்து, வெஸ்ட் இண்டீஸின் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரராக உள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 10 அரைசதங்கள் அடங்கும். பூரன் (106 போட்டிகளில் 97 இன்னிங்ஸ்களில் 26.14 சராசரியுடன் 2,275 ரன்கள்) வெஸ்ட் இண்டீஸிற்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக முதலிடத்தில் உள்ளார்.

33
வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்கள் குவிப்பு

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் பவல் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 29.80 சராசரியுடன் 149 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 124 சிக்சர்களை விளாசியுள்ளார். ரோவ்மன் பவல் அவரையும் முந்தி 150 சிக்சர்கள் அடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

அதிரடி ஆட்டம்

ரோஸ்டன் சேஸ் (25 பந்துகளில் 40) மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் (33 பந்துகளில் 32) முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ஷிம்ரன் ஹெட்மயர் (12 பந்துகளில் 27) அதிரடியாக ஆடிய போதிலும், வெஸ்ட் இண்டீஸ் 14.1 ஓவர்களில் 119/4 என சரிந்தது. பின்னர், ஜேசன் ஹோல்டர் (22 பந்துகளில் 37) மற்றும் பவல் (19 பந்துகளில் 34) ஜோடி 35 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை சவாலான இலக்கு எட்ட வைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories