#AUSvsIND செம குட் நியூஸ்: டிச 13 ஆஸ்திரேலியா பறக்கிறார் ஹிட்மேன்..! கடைசி 2 டெஸ்ட்டில் களம் காண்கிறார்

First Published Dec 12, 2020, 3:46 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக ரோஹித் சர்மா நாளை ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுகிறார்.
 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஐபிஎல்லின் போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் லீக் சுற்றில் சில போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா, நாக் அவுட் மற்றும் ஃபைனல் ஆகிய போட்டிகளில் ஆடினார். ஆனாலும் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெறாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.
undefined
ஐபிஎல் முடிந்ததும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர்கள் அனைவரும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்ட நிலையில், நவம்பர் 19ம் தேதி ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்கு சென்றார்.
undefined
தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி எடுத்தார் ரோஹித் சர்மா. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான அணியில் இல்லை. ரோஹித்தின் ஃபிட்னெஸ் கடந்த 11ம் தேதி பரிசோதிக்கப்பட்டது. ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் ரோஹித் சர்மா தேறியதை அடுத்து, கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக நாளை மும்பையிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து சிட்னிக்கு பறக்கிறார் ரோஹித் சர்மா.
undefined
அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடக்கும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடவில்லை. ஜனவரி 7ம் தேதி சிட்னியில் தொடங்கும் 3வது டெஸ்ட்டில் தான் ஆடவுள்ளார். ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் சர்மா, அங்கு 14 நாட்கள் குவாரண்டினில் இருக்க வேண்டும். குவாரண்டின் காலத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவாரா என்ற தகவல் தெரியவில்லை. அப்படி அனுமதிக்கப்படாத பட்சத்தில், குவாரண்டின் முடிந்து ஒரு வாரத்தில் நேரடியாக 3வது டெஸ்ட்டில் ஆடியாக வேண்டும். கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், ரோஹித் சர்மா கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது இந்திய அணிக்கு உத்வேகமாக அமையும்.
undefined
click me!