ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா? மீண்டும் கோலி கேப்டனா?

First Published | Oct 12, 2024, 8:20 AM IST

Rohit Sharma may miss the first Test against Australia: தனிப்பட்ட காரணங்களால் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடாமல் போகலாம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.

Border Gavaskar Trophy 2024, India vs Australia Test

Rohit Sharma may miss the first Test against Australia : 2018-19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு, மகள் வாமிகா பிறந்த நேரத்தில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்க நாடு திரும்பினார் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பங்கேற்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Rohit Sharma, India vs Australia, BGT 2024

தனிப்பட்ட காரணங்களால் அவர் பெர்த் டெஸ்டில் விளையாடாமல் போகலாம். பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்களிடம் ரோகித் தனது தனிப்பட்ட பிரச்சினையைத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்ந்தால், பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்று ரோகித் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் இன்னும் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை. இதனால் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் இப்போது காத்திருக்கின்றனர்.

Tap to resize

India tour of Australia 2024-25, Border Gavaskar Trophy 2024

ரோகித் ஓய்வில்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு தற்போது ஓய்வில் உள்ளார் ரோகித் சர்மா. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் இப்போது டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். அவரது தலைமையில் ஐசிசி தொடர்களில் கோப்பை வெல்லும் வறட்சியைத் தீர்த்துள்ளது இந்திய அணி.

இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதே ரோகித்தின் இலக்கு. இந்திய அணி தொடர்ந்து 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Rohit Sharma, IND vs AUS Test Series

ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் சதம் அடிக்க இலக்கு:

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடுகிறது. அந்த டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி தொடங்கும். அதன் பிறகு டிசம்பர் 14 ஆம் தேதி கப்பா டெஸ்ட் போட்டி தொடங்கும். டிசம்பர் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கும்.

India tour of Australia 2024-25, Rohit Sharma

2025 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 31.38 சராசரியுடன் 408 ரன்கள் எடுத்துள்ளார் ரோகித். அவர் 3 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோகித்தின் அதிகபட்ச ஸ்கோர் 63.

இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இடம் பெறமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணம் தொடர்பாக அவர் இந்த தொடரில் இடம் பெறமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை. இன்னும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ரோகித் சர்மாவும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!