
Mohammed Siraj takes charge as Telangana DSP: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தெலுங்கானாவில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) முன்னிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முகமது சிராஜூக்கு குரூப்-1 அரசு பதவி வழங்கப்படும் என தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சிராஜ் இன்று தனது கடமைகளை செய்ய பொறுப்பேற்றதையடுத்து அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த வீரர்கள்!
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், குத்துச்சண்டை வீராங்கனை நிஹாத் ஜரீன் மற்றும் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் ஆகியோருக்கு அவரவர் துறைகளில் சிறந்து விளங்கியதற்காக குரூப் 1 பதவியை வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சிராஜ் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அனில் குமார் யாதவ் மற்றும் முகமது ஃபாஹிமுதீன் குரேஷி ஆகியோர் கலந்துகொண்டனர். இது தவிர, டி20 உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய முகமஹ் சிராஜிற்கு தெலுங்கானா அரசு சாலை எண் 78, ஜூப்ளி ஹில்ஸில் 600 சதுர கெஜம் (5400 சதுர அடி) நிலத்தை ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், தெலங்கானாவின் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் அவர் காட்டிய சாதனை மற்றும் எங்கள் மாநிலத்திற்கு பெருமை சேர்த்ததற்காக இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
அவர் தொடர்ந்து கிரிக்கெட் வீரராகவும் இருப்பார், இந்த புதிய பதவியின் மூலம் பலருக்கும் உத்வேகமாக இருப்பார்" என்று வாழ்த்தியுள்ளது. இதேவேளை, முகமது சிராஜ், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்விற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முகமது சிராஜ், ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிகளில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் 700க்கும் அதிகமாக ரன்கள் அடித்த டாப் 5 அணிகள்!
1994 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த முகமது சிராஜ் வலது கை வேகப்பந்து வீச்சிற்கு பெயர் பெற்றவர். எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அப்பா ரிக்ஷா டிரைவர். ஆதலால், சிராஜ் 19 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். தனது தர கிரிக்கெட் போட்டியில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் தனது மாமா அணிக்காக 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இடம் பெற்ற சிராஜ் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இதுவரையில் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 3 முறை 5 விக்கெட் எடுத்திருக்கிறார். இதே போன்று, 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஒரு முறை 5 விக்கெட் எடுத்தார். மேலும், 16 டி20 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இது தவிர ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது. இதற்கு காரணம், முகமது சிராஜ் எடுத்த 6 விக்கெட்டுகள் தான். 7 ஓவர்கள் வீசிய சிராஜ் ஒரு மெய்டன் உள்பட 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படித்து பாருங்கள்: மறக்க முடியாத வெற்றியில் ரத்தன் டாடா – டாடாவின் உதவியால் வளர்ந்த கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?