முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரோகித் : ஜூனியர் ஹிட்மேன் என்ற ரசிகர்கள்!

Published : Apr 19, 2025, 04:25 PM ISTUpdated : Apr 19, 2025, 04:27 PM IST

Rohit Sharma Son Ahaan First Photo : ரோகித் சர்மா தனது மகன் அஹானின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அஹானின் முகம் தெளிவாக தெரிகிறது. இதை வைத்து அஹானை ரசிகர்கள் ஜூனியர் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர்.

PREV
16
முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரோகித் : ஜூனியர் ஹிட்மேன் என்ற ரசிகர்கள்!

ரோகித் சர்மா

Rohit Sharma Son Ahaan First Photo : ரோகித் சர்மா எங்கு போட்டிகளில் விளையாடினாலும், அவரது மனைவி ரித்திகா மைதானத்தில் உற்சாகப்படுத்துவார். ரோகித் சர்மாவுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை பெண், இரண்டாவது குழந்தை ஆண். ரோகித்தின் மகள் சமீரா புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால், மகன் அஹானின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஐபிஎல் தொடரின்போது அஹானின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

26

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரோகித் சர்மா மகனின் பெயர் அஹான் சர்மா. அஹானின் முதல் புகைப்படம் வெளியானதும், ரசிகர்கள் ஜூனியர் ரோகித் என்று கொண்டாடி வருகின்றனர். அஹான் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அஹானின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அஹான் பிறந்ததிலிருந்தே அவரைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

36

அஹான்

சமீபத்தில் வெளியான புகைப்படத்தில், ரித்திகா அஹானை தூக்கியபடி இருக்கிறார். அருகில் அஹானின் சகோதரி சமீரா அமர்ந்திருக்கிறார். தம்பியுடன் சமீரா விளையாடி மகிழ்வதைக் காண முடிகிறது. ரோகித் சர்மாவுக்கு 2024இல் மகன் பிறந்தார்.

46

அஹான் புகைப்படம்

2024 நவம்பர் 15 அன்று பிறந்தார். அதுவரை அஹானின் புகைப்படத்தை ரோகித் மற்றும் ரித்திகா தம்பதியினர் வெளியிடவில்லை. பொது இடங்களுக்கும் அழைத்துச் செல்லவில்லை. இந்த விஷயத்தில் ரோகித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தே தம்பதியினர் மிகவும் கவனமாக இருந்தனர்.

56

வெளியான அஹானின் புகைப்படங்களை ரோகித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது ரோகித் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சொல்லிக்கொள்ளும்படியான ஃபார்மில் இல்லை. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

66

முதல் போட்டியிலே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில், 3 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories