Rohit Sharma, Virat Kohli A+ Contract : Bடி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கிரேடு A+ ஒப்பந்தம் தொடரும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார்.
Rohit Sharma, Virat Kohli BCCI Contract : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா, நட்சத்திர இந்திய பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், கிரேடு A+ பிரிவில் தொடர்ந்து இருப்பார்கள் என்று உறுதிப்படுத்தினார்.
26
கிரேடு A+ பிரிவில் ரோகித், கோலி
கோலி மற்றும் ரோகித், வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் சேர்த்து கிரேடு A+ பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிவித்தது.
"விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கிரேடு A+ ஒப்பந்தம் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தொடரும். அவர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு பகுதியாக உள்ளனர். மேலும் அவர்கள் கிரேடு A+ இன் அனைத்து வசதிகளையும் பெறுவார்கள்," என்று தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
36
இங்கிலாந்திற்கு செல்லும் இந்திய அணி
வரும் ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு முன்னதாக மோசமான ஃபார்ம் காரணமாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத போதிலும் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
தற்போது ஐபிஎல் 2025 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
56
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
தனது டெஸ்ட் வாழ்க்கையில், 36 வயதான விராட் 123 போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் அடங்கும். அவர் இந்தியாவின் நான்காவது அதிக ரன் எடுத்தவர். மே 7 அன்று, ரோகித் 67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 11 ஆண்டுகள் நீடித்த வாழ்க்கைக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 40.57 சராசரியுடன் 4,301 ரன்கள் குவித்துள்ளார், இதில் 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடங்கும்.
66
டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
2024 ஆம் ஆண்டில், டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, விராட் மற்றும் ரோகித் இருவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 35 டி20 உலகக் கோப்பை போட்டிகளில், விராட் 58.72 சராசரியுடன் 1,292 ரன்கள் எடுத்துள்ளார். அவர் போட்டியின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர். 125 T20I போட்டிகளில், விராட் 4,188 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம், 151 T20I போட்டிகளில், ரோகித் 4,231 ரன்கள் எடுத்துள்ளார். ரோகித் இந்த வடிவத்தில் அதிக ரன் எடுத்தவரும் ஆவார்.