விராட் கோலியை பார்க்க பாவமா இருக்கு – 5 வருடத்தில் 2 சதம் – ரிக்கி பாண்டிங் கவலை!

First Published | Nov 11, 2024, 1:07 PM IST

Ricky Ponting Concerned about Virat Kohli's Forms in Test Cricket : 5 ஆண்டுகளில் 2 சதங்கள் மட்டுமே அடித்து மோசமான ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை பார்த்தாலே கவலையாக இருப்பதாக ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Virat Kohli, India vs Australia Test Cricket

Ricky Ponting Concerned about Virat Kohli's Forms in Test Cricket : இன்னும் ஓரிரு வாரங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தொடங்குகிறது. வரும் 22ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடர் 2025 ஜனவரி 7ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

Virat Kohli - Border Gavaskar Trophy 2024

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பிரகாசமாக இருந்த வாய்ப்பை இந்தியா வரிசையாக 3 போட்டிகளில் நியூசிலாந்திடம் தோற்று அதனை இழந்து மோசமான சாதனையையும் தனக்கு சொந்தமாக்கி கொண்டது. இந்த தொடரில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கும் சிக்கல் ஏற்பட்டது. ஆஸீ தொடரில் வெற்றி பெறவில்லை என்றால் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Virat Kohli - BGT 2024

இதே போன்று தான் விராட் கோலியும், நியூசிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் முறையே முதல் டெஸ்டில் 0 மற்றும் 70 ரன்கள் எடுத்தார். 2ஆவது போட்டியில் 1 மற்றும் 17 ரன்கள் எடுத்தார். 3ஆவது மற்றும் கடைசி போட்டியில் 4 மற்றும் ஒரு ரன் எடுத்தார். மொத்தமாக 3 போட்டிகளில் 93 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். ஆஸிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் கோலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் நிலையும் உண்டாகும்.

Virat Kohli Test Cricket Records

ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். தற்போது 36 வயதாகும் கோலி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தமாக 100 ரன்களை கூட எட்டவில்லை. இந்த நிலையில் தான் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வேதனை தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் புள்ளி விவரங்களை நான் பார்த்தேன். அவர் கடந்த 5 ஆண்டுகளில் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை மட்டுமே சதம் அடித்துள்ளார். அந்த 2 சதமும் கடந்த ஆண்டு அடித்தது. அது எனக்கு சரியாக படவில்லை. அது என்றால், கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக வேறு யாரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இருக்க முடியாது. விளையாட்டின் ஜாம்பவான்களை ஒருபோதும் கேள்வி கேட்க மாட்டீர்கள் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

Virat Kohli Test Cricket

கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் மேல் சராசரி வைத்திருந்த கோலி 34 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 31.68 சராசரியில் 1,838 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் 6 போட்டிகளில் விளையாடிய கோலி வெறும் 22.72 சராசரியை மட்டுமே வைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அறிமுகமானதிலிருந்து டெஸ்ட் போட்டிகளி மிக குறைவான சராசரி 22.72 ஆகும்.

ஆஸ்திரேலியாவில் கோலி சிறப்பாக வருவார் – பாண்டிங்

கோலி மோசமான ஃபார்மில் இருந்தாலும் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புகிறேன். இதற்கு முன்னதாக ஆஸிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!