இது கேகேஆர் கோட்டை – அடி கன்ஃபார்ம்: ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்: RR ஜெயிக்க 50 சதவிகித வாய்ப்பு!

First Published | Apr 16, 2024, 7:14 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Image Credits: iplt20.com Instagram

IPL 2024, Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL 31st Match

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

Kolkata Knight Riders vs Rajasthan Royals, 31st Match

இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்று இரு அணிகளும் 31 ஆவது லீக் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Tap to resize

Philip Salt

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Rajasthan Royals

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (விக்கெட் கீப்பர்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ராமன் தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

Kolkata Knight Riders

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆவேஷ் கான், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், யுஸ்வேந்திர சஹால்

Kolkata Knight Riders vs Rajasthan Royals, 31st Match

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், இந்த போட்டியில் கொல்கத்தா 50 சதவிகிதமும், ராஜஸ்தான் ராயல்ஸ் 50 சதவிகிதமும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

KKR vs RR, IPL 31st Match

இதுவரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 14 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 13 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

Latest Videos

click me!