சச்சின், ரோகித் உள்பட அதிக வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்கள்!

First Published Apr 16, 2024, 5:38 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார்.

Indian Premier League 2024

ஒவ்வொரு ஆண்டும் பிசிசியின் மூலமாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்க விழாவுடன் இந்த சீசன் பிரம்மாண்டமாக தொடங்கியது.

MI vs CSK, IPL 2024

இதுவரையில் 30 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 வெற்றிகளுடன் 2ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

IPL 2024

சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை 186 ரன்கள் குவித்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. இதில், என்ன ஆறுதல் என்றால் ரோகித் சர்மா சதம் விளாசியது தான். இதுவரையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் அதிக வயதில் சதம் விளாசியவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

Adam Gilchrist

39 வயது 184 நாட்கள்: ஆடம் கில்கிறிஸ்ட்:

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணிக்காக விளையாடிய ஆடம் கில்கிறிஸ்ட்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 39 வயது 184 நாட்களில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

Sanath Jayasuriya

38 வயது 319 நாட்கள்: சனத் ஜெயசூர்யா:

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்ட போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த சனத் ஜெயசூர்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 வயது 319 நாட்களில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

Chris Gayle

38 வயது 210 நாட்கள்: கிறிஸ் கெயில்:

2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற கிறிஸ் கெயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 38 வயது 210 நாட்களில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

Sachin Tendulkar

37 வயது 356 நாட்கள்: சச்சின் டெண்டுல்கர்:

2011 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற சச்சின் டெண்டுல்கர் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிரான போட்டியில் தனது 37 வயது 356 நாட்களில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

Rohit Sharma

ரோகித் சர்மா 36 வயது 350 நாட்கள்: ரோகித் சர்மா:

நடப்பு ஆண்டின் 17ஆவது சீசனில் 29ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரோகித் சர்மா தனது 36 வயது 350 நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவிய நிலையில், ரோகித் சர்மா தனது சதம் சாதனையை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!