Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, IPL 30th Match
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வேல் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 0, 3, 28, 0, 1, 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தான் ஆர்சிபி தனது ஹோம் மைதானத்தில் நடந்த 30ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
RCB
இதில், தனது மோசமான ஃபார்ம் காரணமாக தானாகவே இந்த போட்டியில் தனக்கு ஓய்வு வேண்டும் என்றும், தனது இடத்தில் வேறொரு வீரரை களமிறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக நேற்று நடந்த போட்டியில் அவருக்கு பதிலாக சௌரவ் சௌகான் அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர், கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
இந்த நிலையில் தான் கிளென் மேக்ஸ்வேல் தான் ஏன் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நேற்று இரவு (போட்டிக்கு முந்தைய இரவு), ஃபாப் மற்றும் பயிற்சி ஊழியர்களிடம் சென்று, எனது இடத்தில் வேறொருவரை விளையாட வைப்பதற்கான நேரம். எனக்கு உடல் மற்றும் மன ரீதியாக ஓய்வு தேவை என்று நினைக்கிறேன் என்று ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
RCB vs SRH, 30th IPL Match
மேலும், சில நேரங்களில் சில விஷயங்களிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும். ஐபிஎல் 2024க்கு முன்பு நான் செய்த ரன்-இன் தொழில் வாழ்க்கையின் சிறந்த 6 மாதங்கள். அணிக்கு திரும்பவும், பங்களிக்கவும் நான் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 287 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதில், டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 102 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களும், அப்துல் சமாத் 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 32 ரன்களும் எடுத்தனர்.
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
பின்னர் கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 42 ரன்களும், பாப் டூ ப்ளெசிஸ் 62 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறினர். அடுத்து வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சரவெடியாக வெடித்து 35 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 83 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Glenn Maxwell, Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
இதுவரையில் ஆர்சிபி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியிலும் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பு பெற குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.