அஸ்வின், சாஹலை கழற்றிவிட்ட ராஜஸ்தான் – சாம்சன், ஜெய்ஸ்வாலுக்கு ரூ.18 கோடி கொடுத்து தக்க வைப்பு!

First Published | Nov 1, 2024, 8:57 AM IST

Rajasthan Royals Retained Players IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லர், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது. சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரை தக்கவைத்துள்ளது.

IPL 2025, IPL 2025 Retention, Rajasthan Royals

Rajasthan Royals Retained Players IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், 10 அணிகளில் அதிகபட்சமாக ஹைதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசென் ரூ.23 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். விராட் கோலி ரூ.21 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களான கேஎல் ராகுல், இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை அவர்களது அணி தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

Rajasthan Royals Released and Retained Players, IPL 2025

இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடந்த மாற்றங்கள் பற்றி பார்க்கலாம்.  அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டனர். ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் ரூ.14 கோடிக்கும், ஷிம்ரான் ஹெட்மயர் ரூ.11 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டனர். சந்தீப் சர்மா ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். ஆனால், அதிரடி நாயகன் ஜோஸ் பட்லரை தக்க வைக்கவில்லை.

Latest Videos


IPL 2025, IPL 2025 Retention, RR Retained and Released Players

தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.79 கோடி செலவு செய்துள்ளது. மெகா ஏலத்திற்கு ரூ.41 கோடியை கையில் வைத்துள்ளது. இருப்பினும், பட்லர் மற்றும் சாஹலை மெகா ஏலத்தில் மீண்டும் வாங்க ராஜஸ்தான் முயற்சி செய்யும். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஷ்வின், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்.

ஜூரலைத் தக்கவைத்தது மற்றொரு சிறப்பு. 2022-ம் ஆண்டு நடந்த வீரர்கள் ஏலத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு தான் துருவ் ஜூரல் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இந்தியாவுக்காக ஜொலித்த ஜூரல் தற்போது டெஸ்ட் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக உள்ளார். பட்லர் விடுவிக்கப்பட்டதால், ஜூரலுக்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கிடைக்கலாம். ஜோஸ் பட்லர் விடுவிக்கப்பட்டதால், விக்கெட் கீப்பர் இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ஜூரலை விடுவிப்பது புத்திசாலித்தனம் அல்ல என்ற கருத்து எழுந்துள்ளது.

RR Retained and Released Players

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடாததால் தான் ராஜஸ்தானால் சந்தீப் சர்மாவை uncapped வீரராக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. கடந்த சீசனில் ராஜஸ்தான் பிளே ஆஃப் செல்வதற்கு சஞ்சுவின் (531 ரன்கள்) மற்றும் பராகின் (573 ரன்கள்) ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. 2023-ம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் யாரும் எடுக்காத சந்தீப் சர்மாவை 50 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தனர். கடந்த சீசனில் 13 விக்கெட்டுகளுடன் சந்தீப் சிறப்பாகவும் செயல்பட்டார்.

கடந்த சீசனில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், பட்லர் 359 ரன்களுடன் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளரான சாஹல், கடந்த சீசனில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் ஜொலித்தார். 2022-ம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் பெங்களூரு விடுவித்த சாஹலை 6.5 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தனர்.

Rajasthan Royals Retained Players IPL 2025

ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்த வீரர்களின் பட்டியல்:

ஜோஸ் பட்லர், குல்தீப் சென், ரவிச்சந்திரன் அஸ்வின் டோனோவன் ஃபெரேரா, குணால் ரத்தோர், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட்,யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், ரோவ்மன் பவல், ஷூபம் துபே, டாம் கோலர் காட்மோர், அபித் முஷ்டாக், நந்த்ரே பர்கர், தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, கேஷவ் மகராஜ், ஆடம் ஜம்பா.

click me!