IPL 2023: RR vs CSK அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..! ராஜஸ்தான் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..!

First Published | Apr 27, 2023, 2:28 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய போட்டியில் மோதும் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவரும் சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகளும் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் 7 போட்டிகள் 4 வெற்றிகளுடன் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. தோற்றாலே மாற்றங்களை செய்ய விரும்பாத சிஎஸ்கே  அணி தொடர்ந்து ஜெயித்துவருவதால் கண்டிப்பாக மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும்.
 

Tap to resize

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
 

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா, ஆகாஷ் சிங்.
 

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆடம் ஸாம்பா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்.
 

Latest Videos

click me!