இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர் பிரித்வி ஷா..! வரலாற்று சாதனை படைத்தார்

First Published Mar 15, 2021, 3:04 PM IST

விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார்.
 

கடந்த 2 ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் சரியாக ஆடாமலோ அல்லது காயத்தால் எந்த தொடரிலும் முழுமையாக ஆடாமலோ இருந்துவந்த பிரித்வி ஷா, இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில்லிடம் இழந்தார். இந்திய அணியில் தனது இடத்தை இழந்த பிரித்வி ஷா, நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் மீண்டும் செம ஃபார்மில் ஆடி ரன்களை குவித்தார் பிரித்வி ஷா.
undefined
விஜய் ஹசாரே தொடரில் செம ஃபார்மில் வெறித்தனமாக ஆடி போட்டிக்கு போட்டி சதம் விளாசி தெறிக்கவிட்ட பிரித்வி ஷா, லீக் சுற்றில் ஒரு இரட்டை சதமும், ஒரு சதமும் அடித்த பிரித்வி ஷா, சவுராஷ்டிராவிற்கு எதிரான காலிறுதி போட்டியில் 185 ரன்களையும், கர்நாடகாவுக்கு எதிரான அரையிறுதியில் 165 ரன்களையும் குவித்து மும்பை அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்றார். உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஃபைனலில் 39 பந்தில் 73 ரன்களை குவித்து மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வெல்ல உதவினார்.
undefined
8 போட்டிகளில் 4 சதங்களுடன் 827 ரன்களை குவித்தார். இதுதான் விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் ஒரு வீரர் குவித்த அதிகமான ரன்கள். இதற்கு முன், 2018 விஜய் ஹசாரே தொடரில் மயன்க் அகர்வால் குவித்த 723 ரன்கள் தான் அதிகமான ஸ்கோராக இருந்தது. இந்த சீசனில் 827 ரன்களை குவித்ததன் மூலம், புதிய சாதனை படைத்துள்ளார் பிரித்வி ஷா.
undefined
click me!