#INDvsENG 2வது டி20: இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்..! தொடக்க ஜோடியில் புதிய முயற்சி

First Published Mar 14, 2021, 7:11 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
undefined
இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2 அறிமுக வீரர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக இளம் வீரரான இஷான் கிஷன் அறிமுகமாகிறார். ராகுலுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்குகிறார்.
undefined
அக்ஸர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இறக்கப்பட்டுள்ளார்.
undefined
இந்திய அணி:கேஎல் ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்.
undefined
இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டிற்கு பதிலாக டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.இங்கிலாந்து அணி:ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத்.
undefined
click me!