
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 237 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா 1 ரன்னில் நடையை கட்ட பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். இதில் இங்கிலிஸ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அவர், அதிரடியாக ஆடி 45 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
இதையடுத்து நேஹல் வதேரா 16 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஷஷாங்க் சிங் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிங் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்க்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 236/5 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 237 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரிஷப் பந்த் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆயுஷ் படோனி 40 பந்துகளில் 74 ரன்களும், அப்துல் சமத் 24 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். ஆனால் அவர்களின் முயற்சி பஞ்சாப் அணியின் வெற்றியைத் தடுக்கவில்லை.
பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா ஒமர்சாய் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 11 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் மும்பை அணியை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. லக்னோ அணி ஏழாவது இடத்தில் உள்ளது. ஸ்கோர் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 236-5, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 199-7.
237 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய லக்னோ அணிக்குத் தொடக்கமே சரியில்லை. மிட்செல் மார்ஷ் டக் அவுட்டாகி வெளியேறினார். அதே ஓவரில் ஐடன் மார்க்ரமும் (13) அவுட்டானார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனும் (6) அவுட்டானார். கேப்டன் ரிஷப் பந்த் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
டேவிட் மில்லரும் (11) சொற்ப ரன்களில் வெளியேறினார். அப்துல் சமத் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். சமத் 24 பந்துகளில் 45 ரன்களும், படோனி 40 பந்துகளில் 74 ரன்களும் எடுத்தனர். முன்னதாக டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 45 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 14 பந்துகளில் 30 ரன்களும், சஷாங்க் சிங் 15 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி சார்பில் ஆகாஷ் மகாராஜ் சிங்கும், திக்வேஷ் ரதியும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பவர் ப்ளேயில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. பிரப்சிம்ரன் சிங் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 13வது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் அவுட்டானார். 15வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 17 ரன்கள் விளாசினார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 65 ரன்கள் குவித்தது.
இதுவரையில் விளையாடிய 11 லீக் போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூக்கு எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்புகள் கனவு நிறைவேறும். அதற்கு புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும்.
அப்படியில்லை என்றால் எல்லா போட்டியிலும் லக்னோ தோல்வி அடைந்தாலோ அல்லது ஒரு சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலோ லக்னோவிற்கு பிளே ஆஃப் வாய்ப்பு இல்லாம போய்விடும். மேலும் இந்த தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 110 ரன்கள் எடுத்திருந்த பண்ட் ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். 11ஆவது போட்டியாக இன்று விளையாடிய போட்டியில் 18 ரன்கள் எடுத்து விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த தொடரில் ரிஷப் பண்ட் மட்டுமே அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஏலம் எடுக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பண்ட் விளையாடுகிறாரா என்றால் இல்லை. இதன் காரணமாக அணி உரிமையாளரின் கோபத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறார். இதுவே பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடி வருகிறார். அதோனி அணியின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.