அப்பாவை நினைத்து ஆனந்த கண்ணீர் - தந்தைக்கு பெருமை சேர்த்த நிதிஷ் ரெட்டிக்கு கிடைத்த பரிசு முத்தம்!

First Published Apr 10, 2024, 9:30 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 23ஆவது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் தந்தையிடமிருந்து பரிசாக முத்தம் பெற்றுள்ளார்.

Nitish Reddy Family

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 23ஆவது லீக் போட்டி நேற்று பஞ்சாப்பின் ஹோம் மைதானமான முல்லன்பூரில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங் செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்கள் குவித்தது.

Nitish Reddy Family

இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டரில் வந்த சிறந்த ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்தார். பின்னர் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Nitish Reddy Family

சாம் கரண் 29, சிக்கந்தர ராஸா 28, ஜித்தேஷ் சர்மா 19 ரன்களில் வெளியேறினர். இதில், பந்து வீசிய நிதிஷ் ரெட்டி, ஜித்தேஷ் சர்மாவிடன் விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், பிராப்சிம்ரன் சிங்கின் கேட்சையும் பிடித்தார்.

Nitish Reddy

கடைசியாக ஷஷாங்க் சிங் மற்றும் அஷூதோஷ் சர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி வெற்றியின் விளிம்பு வரை சென்று 2 ரன்களில் தோல்வியை தழுவினர். கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.

Nitish Reddy, IPL 2024

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது. இந்த போட்டிக்கு பிறகு நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது வென்ற கையோடு தனது அப்பாவை சந்தித்த நிதிஷ் ரெட்டி அவரிடம் ஆசியும் பெற்றுள்ளார்.

PBKS vs SRH, 23rd IPL Match

தனது மகனை கட்டிப்பிடித்து முத்தத்தை பரிசாக கொடுத்துள்ளார் நிதிஷ் ரெட்டியின் தந்தை. இதையடுத்து நிதிஷ் ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது தந்தையை பெருமைப்படுத்தியது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

Nitish Reddy, SRH

என்னை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு அவர் எல்லா கஷ்டங்களுடன் போராடியுள்ளார். எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார். கடைசி போட்டிக்கு பிறகு என் பெற்றோரின் அந்த மகிழ்ச்சியான கண்ணீர் எனது நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றியது

Nitish Kumar Reddy, SRH

கடந்த 2003 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பிறந்த நிதிஷ் ரெட்டி, ஆந்திரா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இதில், 17 ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் விளையாடியுள்ளார். மேலும், 22 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

PBKS vs SRH

நிதிஷ் குமார் ரெட்டி குறித்து ஹனுமா விகாரி கூறியிருப்பதாவது: மிகவும் தாழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நிதிஷ் குமார் ரெட்டியின் கிரிக்கெட் வாழ்க்கைக்காக தியாகம் செய்து அவருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

Sunrisers Hyderabad

அவர் 17 வயதாக இருக்கும் போதிலிருந்து நான் அவரை பார்த்து வருகிறேன். இப்போது ஒரு சிறந்த வீரராக வளர்ந்து நிற்பதை கண்டு பெருமைப்படுகிறேன். எதிர்காலத்தில் ஹைதராபாத் மற்றும் இந்திய அணியின் சொத்தாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

click me!