வரலாற்றில் முதல் முறை: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து புதிய சரித்திரம் படைத்த நியூசிலாந்து!

First Published | Nov 3, 2024, 1:44 PM IST

India Whitewash against New Zealand: இந்தியாவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தலைமையில் அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்தியது.

India vs New Zealand 3rd Test, New Zealand 3-0 Win

India Whitewash against New Zealand: இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்திய மண்ணில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சரித்திர சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற புனே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றில் முதல் முறையாக 2-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது. இதுவரையில் 12 முறை இந்தியா வந்த நியூசிலாந்து ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை 69 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து வரலாறு படைத்தது.

India vs New Zealand 3rd Test, New Zealand 3-0 Win

இதுவரையில் இந்திய அணியை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது இல்லை. அந்த சாதனையை இப்போது நியூசிலாந்து படைத்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் குவித்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்ஸ் விளையாடி 263 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்தார். பின்னர் 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இன்னிங்ஸிலும் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Tap to resize

India vs New Zealand 3rd Test, New Zealand 3-0 Win

இறுதியாக இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று காலை 147 ரன்களை வெற்றி இலக்காக தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 1 ரன்னுக்கு கிளீன் போல்டானார். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வந்த விராட் கோலி இந்த இன்னிங்ஸில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5, சர்ஃபராஸ் கான் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் மட்டுமே நிதானமாக விளையாடி வந்தார். ஆனால், அதன் பிறகு வந்த பின் வரிசை வீரர்களான ரவீந்திர ஜடேஜா 6, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, ஆகாஷ் தீப் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசியாக வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் மட்டுமே அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.

India vs New Zealand 3rd Test, New Zealand 3-0 Win

இறுதியாக நியூசிலாந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது. இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இதுவரையில் எந்த அணியும் ஒயிட் வாஷ் செய்தது இல்லை. அப்படியிருக்கும் போது முதல் முறையாக டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 3-0 என்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து சரித்திரம் படைத்துள்ளது. அதோடு இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையையும் நியூசிலாந்து படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக 3க்கும் அதிமான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை, இங்கிலாந்து (4), ஆஸ்திரேலியா (3) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (ஒரு முறை) ஆகிய அணிகள் ஒயிட்வாஷ் செய்துள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது நியூசிலாந்து அணியும் இணைந்துள்ளது. முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆன இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.

Latest Videos

click me!