
Virat Kohli Waste his Wickets: நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 0 மற்றும் 70 ரன்கள் எடுத்தார். புனே டெஸ்ட் போட்டியில் 1 மற்றும் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது மும்பையில் நடைபெற்று வரும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு பயத்தில் ரன் எடுக்க ஓடி ரன் அவுட்டில் பரிதாபமாக வெளியேறினார்.
எங்கு ஸ்டிரைக்கில் இருந்தால் தனது விக்கெட்டை இழந்துவிடுவோமோ என்ற பயம் விராட் கோலியை தொற்றிக் கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய அணியும், இந்திய அணி வீரர்களும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வரும் நிலையில் விராட் கோலி தனது விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு ரன் எடுக்க ஓடியுள்ளார். ஆனால், மிட் ஆன் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த மேட் ஹென்றி கோலி நான் ஸ்ரைக்கிற்கு வருவதற்குள்ளேயே ஸ்டெம்பை குறி வைத்து எறிந்து அவுட் செய்தார்.
முதல் நாள் ஆட்டம் முடிய குறைவான நேரம் இருந்த நிலையில் விராட் கோலி விக்கெட்டை காப்பாற்ற நைட் வாட்ச்மேனான முகமது சிராஜ் களமிறங்கினார். ஆனால், அவர், அஜாஸ் படேல் ஓவரில் கிளீன் எல்பிடபிள்யூ வாங்கி ஆட்டமிழந்தார். சந்தேகத்தில் ரெவியூம் எடுத்து டிஆர்எஸ்ஸையும் வீணடித்தார். அதன் பிறகு விராட் கோலி வந்தார். வந்த வேகத்தில் புல்டாஸ் பந்தில் பவுண்டரி அடித்த கையோடு ரன் அவுட்டில் நடையை கட்டினார். மொத்தமே கோலி 6 பந்துகள் நின்று 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இது விராட் கோலியின் 600ஆவது இன்னிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 599 இன்னிங்ஸ் விளையாடிய கோலி மொத்தமாக 27129 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். 599 இன்னிங்ஸ் விளையாடி அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 25983 ரன்களும், ரிக்கி பாண்டிங் 25294 ரன்களும், ஜாக் காலிஸ் 25204 ரன்களும், குமார் சங்கக்காரா 24781 ரன்களும், ராகுல் டிராவிட் 24092 ரன்களும் எடுத்தனர்.
இதுவரையில் விராட் கோலி விளையாடிய 100ஆவது இன்னிங்ஸ், 200, 300, 400, 500 மற்றும் 600 இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். விராட் கோலியின் இன்னிங்ஸ் ரன்கள்:
100ஆவது இன்னிங்ஸ் – 21 ரன்கள் (vs Aus, ODI, 2012)
200ஆவது இன்னிங்ஸ் – 7 ரன்கள் (vs Eng, Test, 2014)
300ஆவது இன்னிங்ஸ் – 122 ரன்கள் (vs Eng, ODI, 2017)
400ஆவது இன்னிங்ஸ் – 3 ரன்கள் (vs Aus, ODI, 2019)
500ஆவது இன்னிங்ஸ் – 29 ரன்கள் (vs SA, Test, 2022)
600ஆவது இன்னிங்ஸ் – 4 ரன்கள் (vs NZ, Test, 2024)* இன்றைய போட்டி மும்பை டெஸ்ட் கிரிக்கெட்.
மோசமான ஃபார்ம் காரணமாக தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும், அவர் லண்டனுக்கே திரும்பி செல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வளவு ஏன் முன்னாள் வீரர்கள் கூட விராட் கோலியை கடுமையாக சாடி வருகின்றனர். தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு முக்கியமான தருணத்தில் தனது விக்கெட்டை இழந்து அவரை விமர்சித்துள்ளார்.
கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த போது, கோலி மனதில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டார். என்ன ஒரு வேஸ்ட் விக்கெட் என்றார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழல் மாயாஜாலத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்கள் எடுத்தார். வில் யங் 71 ரன்கள் எடுத்தார். பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறவே நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ரோகித் சர்மா (18), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (30), முகமது சிராஜ் (0) மற்றும் விராட் கோலி (4) ஆகியோரது விக்கெட்டுகளை பறி கொடுத்து 86 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில் சுப்மன் கில் 31 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேட் ஹென்றி ஒரு விக்கெட் எடுத்தார்.