பதிலுக்கு பதில் கொடுக்க சரியான நேரம், மிகப்பெரிய வெற்றியும் தேவை – இல்லனா நடையை கட்ட வேண்டியது தான்!

First Published | Oct 9, 2024, 2:33 PM IST

India Women vs Sri Lanka Women, ICC Womens T20 World Cup 2024: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா? இந்திய மகளிர் அணிக்கு இந்தப் போட்டி ரொம்பவே முக்கியம்.

INDW vs SLW, Womens T20 World Cup 2024

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இல்லையென்றால் லீக் சுற்றுடன் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து மகளிர் இந்தியா அணி வெளியேறும்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 12ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், மகளிர் இந்தியா மற்றும் மகளிர் இலங்கை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி ரொம்பவே முக்கியமானது.

India Women vs Sri Lanka Women, ICC Womens T20 World Cup 2024

குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை அணி விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. இதன் மூலமாக இலங்கையின் அரையிறுதி கனவு பறிபோனது. எனினும் இன்றைய போட்டியில் எப்படியும் இலங்கை வெற்றி பெற கடுமையாக போராடும்.

மறுபுறம் டி20 உலகக் கோப்பை தொடரை தோல்வியோடு தொடங்கிய ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மகளிர் இந்திய அணி 2ஆவது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தோற்று இருந்தால் மகளிர் அணி வெளியேறியிருக்கும். நல்ல வேளையாக மகளிர் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

Latest Videos


ICC Womens T20 World Cup, 2024, INDW vs SLW

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

காயம் காரணமாக இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தப் போட்டியில் இடம் பெறமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தனா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால், பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில் அதனை மட்டும் சரிசெய்து கொண்டு இன்றைய போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India Women vs Sri Lanka Women, ICC Womens T20 World Cup, 2024

பவுலிங்கில் ரேணுகா சிங், ஷ்ரேயங்கா பட்டீல் மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் மட்டும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமீமா ரோட்ரிக்ஸ் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினர். ஆனால், இது முக்கியமல்ல இன்று நடைபெறும் மகளிர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டும். இது தான் மகளிர் இந்திய அணிக்கு முக்கியம்.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 25 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய மகளிர் அணி 19 போட்டியிலும், இலங்கை 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

click me!