இது மட்டும் நடக்கும் வரையில் ரோகித் சர்மா ஓய்வு பெறவே மாட்டார் – பயிற்சியாளர்!

First Published Oct 9, 2024, 11:41 AM IST

Rohit Sharma Retirement Rumour: ரோகித் சர்மா ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு விளக்கமளித்துள்ளார் அவரது சிறுவயது பயிற்சியாளர். 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா பங்கேற்பார் எனவும் தினேஷ் லாட் உறுதி அளித்துள்ளார்.

Rohit Sharma Retirement, 2027 ODI World Cup

டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், இதே போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், அதில் துளி கூட உண்மை இல்லை. இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

Rohit Sharma ODI and Test Cricket Retirement, ODI World Cup 2027

அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க. ரோகித் சர்மா பற்றி நன்கு அறிந்த தினேஷ் லாட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அவர் ஓய்வு பெறமாட்டார். வயது கூட கூட சோதனைகளிலிருந்து வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தன்னை முழுமையாக உடற்தகுதியுடன் வைத்திருக்க வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் விருப்பம்.

Latest Videos


Rohit Sharma Retirement from All Format Cricket

எனினும், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று என்னால் உத்தரவாதம் அளிக்கிறேன். தற்போது ரோகித் சர்மா அற்புதமாக விளையாடி வருகிறார்.

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா?

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை வந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. கேப்டன் ரோகித் சர்மா 11 போட்டிகளில் விளையாடி 54.27 சராசரியில் 597 ரன்கள் எடுத்தார்.

Rohit Sharma Test and ODI Retirement, Rohit Sharma Childhood Coach Dinesh Lad

இதைத் தொடர்ந்து வரும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அப்போது ரோகித் சர்மா 39 வயதை எட்டிவிடுவார். உலகக் கோப்பை தொடரை செப்டம்பர் முதல் நவம்பர் வரை மட்டுமே நடத்தினால், அவருக்கு 40 வயது இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், 2027 உலகக் கோப்பையில் விளையாட ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

Rohit Sharma, IND vs AUS ODI World Cup 2023 Final

2023 உலகக் கோப்பை தோல்வி:

இந்தியாவில் நடைபெற்ற 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியோடு வெளியேறியது. இது குறித்து பேசிய தினேஷ் லாட், தோல்வியால் துவண்டு போன ரோகித் சர்மா அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டார். எப்போதுமே இந்திய நாட்டிற்காகவே விளையாட விரும்பினார். இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் கூட இந்திய நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

வெற்றியும், தோல்வியும் இயல்புத்தான். ஆனால், எல்லா போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த தொடரில் ரோகித் சர்மா சிறப்பாகவே விளையாடினார். இதனை எல்லோருமே பார்த்திருப்பீர்கள். ஆனால், கடைசி போட்டியில் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் இன்னும் கொஞ்ச நேரம் நின்று விளையாடியிருந்தால் இந்தியா டிராபி ஜெயிச்சுருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!