IPL 2023: பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

First Published | Apr 19, 2023, 12:45 PM IST

ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஆர்ச்சர் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3ஆவது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
 

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 25ஆவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்து வீச்சு தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 28 ரன்னும், இஷான் கிஷான் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா தன் பங்கிற்கு அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

Tap to resize

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

கடைசி வரை அதிரடியாக ஆடிய கேமரூன் க்ரீன் 40 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது.

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக் 9 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ராகுல் திரிபாதி 7 ரன்னிலும், அபிஷேக் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி வரை போராடிய மாயங்க் அகர்வால் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். 

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

ஹென்ரிச் கிளாசன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

இந்தப் போட்டியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அதுவும் புவனேஷ்வர்குமார் விக்கெட்டை எடுத்தார். அர்ஜூன் டெண்டுல்கருக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கேப்பை வழங்கிய ரோகித் சர்மா, புவனேஷ்வர் குமார் அடித்த பந்தை கேட்ச பிடித்து அவருக்கு இந்த விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார். 

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றி

இது ஒரு புறம் இருக்க, இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

அர்ஜூன் டெண்டுல்கர்

அதோடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்க பலமாக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாமலே இந்த வெற்றிகளை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று 25 ஆம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Latest Videos

click me!