ஐபிஎல் 2020: சிஎஸ்கேவையே அல்லு தெறிக்கவிடும் மும்பை இந்தியன்ஸின் மிரட்டலான ஆடும் லெவன்.. தெறி டீம்

First Published Sep 18, 2020, 9:58 PM IST

நாளை(சனிக்கிழமை) தொடங்கும் ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டியில் ஐபிஎல்லில் வெற்றிகரமாக கோலோச்சும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே போட்டி என்றாலே அனல் பறக்கும். அந்தவகையில், முதல் போட்டியிலேயே இந்த இரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

முதல் போட்டியில் சமபலத்துடன் மோதும் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதுமே நல்ல காம்பினேஷனை கொண்ட வலுவான அணி. இந்த சீசனிலும் வலுவாகவே உள்ளது. சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஆடவில்லை. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னரான மலிங்கா இந்த சீசனில் ஆடவில்லை.

சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா  தலைமையில் களமிறங்கும் உத்தேச மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவனை பார்ப்போம். 
 

1. ரோஹித் சர்மா (கேப்டன், தொடக்க வீரர்)
undefined
2. குயிண்டன் டி காக் (தொடக்க வீரர்)மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் லின்னும் இருப்பதால், தொடக்க ஜோடி குறித்த சந்தேகம் எழுந்த நிலையில், ரோஹித்தும் குயிண்டன் டி காக்கும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பதை தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே உறுதி செய்துவிட்டதால், குயிண்டன் டி காக் தான் தொடக்க வீரர்.
undefined
3. சூர்யகுமார் யாதவ் (3ம் வரிசை வீரர்)2011லிருந்து 2013 சீசன் வரை மும்பை இந்தியன்ஸில் ஆடிய சூர்யகுமார் யாதவ், அதன்பின்னர் 4 சீசன்களில் கேகேஆர் அணியில் ஆடினார். 2018லிருந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் சூர்யகுமார் யாதவ், அந்த அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கிறார்.
undefined
4. இஷான் கிஷான் (4ம் வரிசை அதிரடி வீரர்)மும்பை இந்தியன்ஸின் இடது, வலது கலவை காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும் வீரர் இஷான் கிஷான். இளம் துடிப்பான அதிரடி வீரர் இஷான் கிஷான், மும்பை இந்தியன்ஸின் இளம் சொத்துக்களில் ஒருவர்.
undefined
5. பொல்லார்டு (அதிரடி மிடில் ஆர்டர் வீரர்)
undefined
6. ஹர்திக் பாண்டியா (அதிரடி ஆல்ரவுண்டர்)
undefined
7. க்ருணல் பாண்டியா (ஸ்பின் ஆல்ரவுண்டர்)
undefined
8. நேதன் குல்ட்டர்நைல் (ஃபாஸ்ட் பவுலர்)இந்த சீசனில் குல்ட்டர்நைலை ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். பேட்டிங்கும் ஆடத்தெரிந்த ஃபாஸ்ட் பவுலர் குல்ட்டர்நைல்.
undefined
9. டிரெண்ட் போல்ட் (இடது கை ஃபாஸ்ட் பவுலர்)
undefined
10. ராகுல் சாஹர் (ரிஸ்ட் ஸ்பின்னர்)
undefined
11. ஜஸ்ப்ரித் பும்ரா (ஃபாஸ்ட் பவுலர்)
undefined
click me!