WPL 2025 Final, Mumbai Indians Become Champion : மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் தொடர் போன்றும் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் முதல் டிராபியை கைப்பற்றியது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டிராபியை கைப்பற்றியது.
WPL 2025 Final, Mumbai Indians Become Champion
இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசனில் 2ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் டிராபியை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த டெல்லி கேபிடல்ஸ் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாமல் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
WPL 2025 Final, Mumbai Indians vs Delhi Capitals
இந்தியன்ஸ் (MI) அணி, டெல்லி கேப்பிடல்ஸுக்கு (DC) எதிராக மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டியில் 149/7 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடினார். டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஹேலி மேத்யூஸ் 10 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை மரிசான் காப் போல்ட் செய்தார். யாஸ்திகா பாட்டியாவும் 14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து காப்பிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் மும்பை அணி 14/2 என தடுமாறியது.
Delhi Capitals Women vs Mumbai Indians Women
இருப்பினும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் நாட் சிவர்-பிரண்ட் ஆகியோர் இணைந்து 89 ரன்கள் சேர்த்தனர். பின்னர், சிவர்-பிரண்ட் 30 ரன்களில் ஷ்ரீ சரணியால் ஆட்டமிழந்தார். அமிலியா கெர் (2) மற்றும் சஜீவன் சஜனா (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி 112/5 என ஆனது. கேப்டன் ஹர்மன்பிரீத் 44 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஜி கமாலினி 10 ரன்கள் எடுத்தார்.
Harmanpreet Kaur, WPL 2025 Final
அமன்ஜோத் கவுர் (14*) மற்றும் சம்ஸ்கிருதி குப்தா (8*) கடைசி ஓவர்களில் கொஞ்சம் ரன்கள் சேர்க்க, மும்பை அணி 149/7 ரன்களை எட்டியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மரிசான் காப் 2/11 என்ற கணக்கில் சிறப்பாக பந்து வீசினார். ஜெஸ் ஜோனாசென் (2/26) மற்றும் ஷ்ரீ சரணி (2/43) ஆகியோரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அன்னபெல் சதர்லேண்ட் 1/29 எடுத்தார். பின்னர் 150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆரம்பமெ அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் கேப்டன் மெக் லானிங் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே போன்று அதிரடியாக விளையாடக் கூடிய ஷபாலி வர்மாவும் 4 ரன்களுக்கு வெளியேறினார்.
WPL 2025, DC vs MI Final
அடுத்து வந்த ஜெஸ் ஜோனாசென் 13, அன்னபெல் சதர்லேண்ட் 2 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களுக்கு நடையை கட்டினார். சாரா பிரைஸ் 5 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அணிக்கு நம்பிக்கையா இருந்த மரிசான் காப் அதிரடியாக விளையாடி வந்த போதிலும் அவரும் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை டெல்லிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த போதிலும் இலக்கை எட்ட முடியவில்லை.
WPL 2025 Final, Mumbai Indians Become Champion
நிகி பிரசாத் கடைசி வரை போராடிய போதிலும் அவரால் கடைசியில் இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி கேபிடல்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக 3ஆவது முறையாக முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு வந்த டெல்லி கேபிடல்ஸ் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாமல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
WPL 2025 Final, Mumbai Indians Become Champion
முதல் சீசனில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2ஆவது சீசனில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. போட்டியின் நடுவில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் கவுரின் வேண்டுதல் இப்போது நிறைவேறியுள்ளது. 2ஆவது முறையாக டிராபி கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
WPL 2025 Final, Delhi Capitals vs Mumbai Indians
சுருக்கமான ஸ்கோர்: மும்பை இந்தியன்ஸ் 149/7 (ஹர்மன்பிரீத் கவுர் 66, நாட் சிவர்-பிரண்ட் 30; மாரிசான் கப் 2/11) vs டெல்லி கேப்பிடல்ஸ். டெல்லி கேபிடல்ஸ் 141/9 (மரிசான் காப் 40, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30, நிகி பிரசாத் 25 நாட் அவுட், நாட் சிவர் பிரண்ட் 3/30, அமெலியா கெர் 2/25) vs மும்பை இந்தியன்ஸ்