ஜூலை 7-ம் தேதி எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். வயது காரணமாக, வரக்கூடிய ஐபிஎல் தொடர் அவருடைய கடைசி சீசனாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வீரர் எம்.எஸ்.தோனி. 2008 ஐபிஎல் ஏலத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி, பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். ஜூலை 7-ம் தேதி அவருக்கு பிறந்தநாள்.
26
இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்ற முதல் வீரர்
2010 மற்றும் 2011-ல் தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் தோனி. ஒரு அணிக்காக 100, 200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்த முதல் வீரரும் இவரே. மேலும், ஐபிஎல்-ல் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே லோயர்-ஆர்டர் பேட்ஸ்மேனும் தோனிதான்.
36
45வது பிறந்தநாள்
வரவிருக்கும் ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி தொடராக இருக்கலாம். காரணம், ஜூலை 7-ம் தேதியுடன் அவருக்கு 45 வயது ஆகிறது. சிஎஸ்கே-வின் அனைத்து போட்டிகளிலும், ரசிகர்கள் தோனியின் பேட்டிங்கை காண ஆவலுடன் காத்திருப்பார்கள்.
ஐபிஎல்-ல் அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி தன்வசம் வைத்துள்ளார். இந்த தொடரின் நம்பர் 1 விக்கெட் கீப்பராக தோனி நீண்டகாலமாக இருந்து வருகிறார்.
56
42 ஸ்டம்பிங்
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 42 ஸ்டம்பிங்குகளை எம்.எஸ்.தோனி செய்துள்ளார். இதுவே ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச சாதனையாகும். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர், அவரின் கடைசி தொடராக இருக்க வாய்ப்புள்ளது.
66
ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக போட்டிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்காக தோனி எப்போதாவதுதான் போட்டிகளைத் தவறவிட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் ஃபிட்டான வீரர்களில் ஒருவரான இவர், 250 போட்டிகளில் விளையாடியுள்ளார். கேப்டனாக 226 போட்டிகளில் விளையாடி அதிக போட்டிகளுக்கு கேப்டன்சி செய்த சாதனையை தோனி படைத்துள்ளார். இதில் 133 வெற்றி, 91 தோல்விகள் அடங்கும். அவரின் வெற்றி சதவீதம் 58.84. அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 158 போட்டிகளில் கேப்டனாக இருந்து 87 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.