ஐபிஎல் 2020: இந்த ஒரு காரணம் போதும்; கேகேஆர் தான் கோப்பையை வெல்லும்..! இங்கி., முன்னாள் கேப்டன் அதிரடி

First Published Sep 19, 2020, 5:30 PM IST

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் கேகேஆர் அணி தான் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என காரணத்துடன் கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
 

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் தாமதமாக தொடங்கியது மட்டுமல்லாது, இந்தியாவில் நடக்காமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இன்று ஐபிஎல் தொடங்கும் நிலையில், முதல் போட்டியிலேயே இருபெரும் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுவதால், ரசிகர்கள் பேரார்வத்தில் உள்ளனர்.
undefined
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பிலும் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடள்ஸ் அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் உள்ளன. ஆக மொத்தத்தில் அனைத்து அணிகளின் அல்டிமேட் நோக்கமும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான்.
undefined
இந்நிலையில், முன்னாள் ஜாம்பவான்கள் பலரும், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற ஆருடம் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
undefined
இந்த சீசனில் கேகேஆர் அணி தான் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.
undefined
இதுகுறித்து பேசிய மைக்கேல் வாகன், கேகேஆர் அணி தான் இந்த சீசனில் கோப்பையை வெல்லும். நான் இப்படி சொல்ல காரணம், பிரெண்டன் மெக்கல்லம்(கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர்). பிரெண்டன் மெக்கல்லம் சிறந்த பயிற்சியாளராக திகழ்கிறார். அவரது பயிற்சியாளராக இருந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தான், அண்மையில் கரீபியன் பிரீமியர் லீக் டைட்டிலை வென்றது. அவர் பயிற்சியாளராக சிறப்பாக செயல்படுகிறார்.
undefined
சுனில் நரைன், குல்தீப் யாதவ், பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில், நிதிஷ் ராணா என மிகச்சிறந்த வீரர்களை அணியில் பெற்றுள்ளது கேகேஆர். இந்த சீசனில் கேகேஆர் அணி தான் கோப்பையை வெல்லும் என்று மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
கேகேஆர் அணி:தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், லாக்கி ஃபெர்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி, சித்தேஷ் லத், பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், வருண் சக்கரவர்த்தி, டாம் பாண்ட்டன், அலி கான், ராகுல் திரிபாதி, கிறிஸ் கிரீன், நிகில் ஷங்கர் நாயக், சித்தார்த் மணிமாறன்.
undefined
click me!