வினாடிக்கு ரூ.49.6 வீதம் சம்பளம் பெறும் ரிஷப் பண்ட்; இன்றைய போட்டியில் ஏன் களமிறங்கவில்லை?

Rishabh Pant IPL 2025 Salary : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் சாதனை படைத்த நிலையில் அதற்காக அவர் விளையாடி வருகிறார் என்றால் இல்லை, தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

Lucknow Super Giants Captain Rishabh Pant earns Rs.49.6 per second in IPL 2025 in Tamil rsk
Lucknow Super Giants Captain Rishabh Pant, IPL 2025

Rishabh Pant IPL 2025 Salary : ஐபிஎல் 2025 கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதன் மூலமாக முறியடித்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Lucknow Super Giants Captain Rishabh Pant earns Rs.49.6 per second in IPL 2025 in Tamil rsk
Rishabh Pant-Sanjeev Goenka

இதையடுத்து கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதில், ரிஷப் பண்ட் விளையாடிய 4 போட்டியிலும் 0, 15, 2, 2 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனத்திற்கு உள்ளானர்.


Rishabh Pant Salary in IPL 2025

அதுமட்டுமின்றி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உடனான கோபத்திற்கு உள்ளானார். மேலும், கோயங்கா மற்றும் பண்ட் இருவரும் பேசிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது கொல்கத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்கவில்லை. எப்போதும், 4ஆவது வரிசையில் களமிறங்கும் பண்ட் இன்றைய போட்டியில் களமிறங்கவே இல்லை.

LSG captain Rishabh Pant Every Minute Salary

அவரது வரிசையில் அப்துல் சமாத் களமிறங்கினார். இவரைத் தொடர்ந்து டேவிட் மில்லர் களமிறங்கினார். இதுவும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் குறித்து விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பண்ட் ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு நிமிடம், ஒவ்வொரு மணி நேரம், ஒவ்வொரு நாள், ஒவ்வொரு மாதத்திற்கும் என்று எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

Rishabh Pant Salary in IPL 2025

அதன்படி, ஒவ்வொரு வினாடிக்கும் என்று பார்க்கையில் ரிஷப் பண்ட் ரூ.49.6, ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.2,976, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ரூ.1,78,571 என்று சம்பளம் பெறுகிறார். மேலும், நாள் ஒன்றிற்கு ரூ.42,85,714, வாரத்திற்கு ரூ.3,00,00, 000 மற்றும் மாதத்திற்கு ரூ.13,50, 00,000 என்று சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

vuukle one pixel image
click me!