SA vs IND Final T20I Match
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி2 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில், டர்பனில் நடக்க இருந்த முதல் டி20 போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
Kuldeep Yadavs 5 Wickets vs South Africa
கியூபெர்காவில் நடந்த 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், தான் தொடரை, வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று இரவு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.
Kuldeep Yadav 5 Wickets
இதில், தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
HBD Kuldeep Yadav
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் மேத்யூ ப்ரீட்ஸ்கே 4 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் கிளீன் போல்டானார். ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 8 ரன்களில் முகமது சிராஜ் கையால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
SA vs IND 3rd T20 Final
அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 5 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 25 ரன்களில் நடையை கட்டினார். டோனோவன் ஃபெரேரா 12 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார்.
india kuldeep yadav
அதன் பிறகு வந்த வீரர்கள் யாரும் அதிகபட்சமாக 1 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. அண்டில் பெஹ்லுக்வேயோ 0, கேசவ் மகாராஜ் 1, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ் என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். தப்ரைஸ் ஷம்ஸி ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக, டேவிட் மில்லர் 35 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
Kuldeep Yadav
இறுதியாக தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்த நிலையில் டிராபியை சூர்யகுமார் யாதவ் மற்றும் ஐடன் மார்க்ரம் இருவரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
Kuldeep Yadav
இந்தப் போட்டியில் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸ் உள்பட 100 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதும் சூர்யகுமார் யாதவ்விற்கு வழங்கப்பட்டது.
Kuldeep Yadav
டேவிட் மில்லர் விக்கெட் எடுத்ததன் மூலமாக டி20 போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதோடு, தனது 29ஆவது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி எந்த பந்து வீச்சாளரும் செய்யாத உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
Kuldeep Yadav
குல்தீப் யாதவ் வீசிய 2.5 ஓவர்களில் கடைசி 7 பந்தில் மட்டுமே 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 17 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலர் என்ற உலக சாதனையை இந்திய பவுலர் குல்தீப் யாதவ் நிகழ்த்தியுள்ளார்.
Kuldeep Yadav
இதற்கு முன்னதாக இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் தனது பிறந்தநாளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இந்த சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். இதே போன்று கடந்த 2018 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.